இரண்டரை கோடி பெண்கள் கல்வி பயில உதவிய பெருநிறுவன தலைவர்! சேத்னா சோனி
சேத்னா சோனி |
சேத்னா சோனி
புராக்டர் அண்ட் கேம்பிள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவு தலைவர்.
இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாள் ஆகிய நாடுகளில் 2,200 கோடி வணிகத்தை செய்து வரும் பொறுப்பை சோனி ஏற்றுள்ளார். விஸ்பர், ஆல்வேஸ், பேன்டீன், ரிஜாய்ஸ் ஆகிய பிராண்டுகளை விற்பனை, விளம்பரம் செய்து ஆகியவற்றில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு நிறைய அனுபவங்களைப் பெற்றவர். 34 வயதில் உலகில் மிகச்சிறந்த விற்பனையாளர் வணிக பெண்மணியாக உருவாகியுள்ளார். இத்துறையில் இது முக்கியமான சாதனை.
பொருட்களை விற்பதுதான் நோக்கம் என்றாலும் அதனை சமூக பிரச்னையோடு தொடர்புபடுத்தி மக்களை ஈர்த்துக்கொண்டது சோனியின் தனித்துவம், மாதவிடாய் பற்றிய பல்வேறு மூடநம்பிக்கைகளை தகர்த்தவர் இரண்டரை கோடி பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் முயற்சியையும் நிறுவனத்தின் மூலம் செய்தார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் விஸ்பர் பிராண்டு 2014ஆம்ஆண்டு டச் தி பிக்கிள் என்ற திட்டத்தின் கீழ் உலகப்ப்புகழ்பெற்றது. உலகளவில் சமூக பிரச்னையை எடுத்து சொன்ன காரணத்திற்காக நிறைய விருதுகளை வென்றது. சானிடரி நாப்கின் விற்பனையில் 7 சதவீத விற்பனை வளர்ச்சிக்கு சோனியின் திட்டங்களே காரணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக