இன்மொபி நிறுவனத்தை வளர்த்தெடுத்தவர், சொகுசு ஆடம்பர பொருட்களை விளம்பரப்படுத்திய சாதனையாளர்!
வஸ்துவா அகர்வால் |
இம்பேக்ட் 50!
சாதனைப் பெண்கள்
வஸ்துவா அகர்வால்
இன்மொபி, ஆசியா பசிபிக் இயக்குநர்
பிட்ஸ் பிலானியில் படித்தவர். ஐஐஎம் பெங்ளூருவில் படித்த திறமைசாலி. எம்பிஏ முடித்தபிறகு லண்டனிலுள்ள கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்தார். பின்னாளில் யுனிலீவர், குரூப் எம் ஆகிய நிறுவனங்களோடு பணியாற்றினார். இன்மொபி நிறுவனம் பல்வேறு பிரிவுகளில்முதலீடு செய்யவும் 100 மில்லியன் டாலர்கள் வருமானம் பார்க்கவும் வஸ்துவா அகர்வால் செய்த முயற்சிகள் முக்கியமானவர். இன்மொபி நிறுவனத்திற்கு 10 நாடுகளில் பத்து அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் 150 பேர் கொண்ட குழுவை மேற்பார்வை செய்து அவர்களை ஊக்கப்படுத்துவது வஸ்துவா அகர்வால்.
அர்ச்சனா ஜெயின் |
அர்ச்சனா ஜெயின்
ஆர்ஆர் பப்ளிக் ரிலேசன், நிறுவனர், இயக்குநர்
1998ஆம் ஆண்டு அர்ச்சனா ஜெயின் தனது நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது நிறுவனத்தில் 110 பயிற்சி பெறும் மாணவர்கள் இருந்தனர். நடுத்தர பொதுமக்கள் தொடர்பு நிறுவனமாக வளரத் தொடங்கியது. விலைமதிப்பான பொருட்கள் விற்பனை இந்தியாவில் மெல்லத் தொடங்கியது. அதில் பயன் பெற்றவர்களில் அர்ச்சனா ஜெயினும் ஒருவர். விளம்பரம், மக்கள்தொட்ர்புத்துறையில் இவருக்கு 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. ஐடிசி சேவ்லான் விளம்பரத்திற்காக 2017ஆம் ஆண்டு கோல்டு பிஆர் லயன் விருதை கேன்ஸில் பெற்றவர் அர்ச்சனா.
கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி 24 சதவீதமாக உள்ளது. வருமான வளர்ச்சி 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. லைப்ஸ்டைல் மற்றும் லக்ஸூரி பொருட்களுக்கான விற்பனை, விளம்பரங்களை ஆர்பி பண்டிட் நிறுவனம் பெரும்பாலும் ஏற்று செய்கிறது. இதன் காரணமாக பேஷன் துறையில் 100 முக்கியமான மனிதர்கள் வரிசையில் அர்ச்சனா ஜெயின் இடம்பிடித்து வருகிறார்.
impact 50
கருத்துகள்
கருத்துரையிடுக