குழந்தைகள் ஊட்டச்சத்தான முட்டையை பெறுவதை தடுக்கும் ஜெயின் அமைப்புகள்!- முட்டை அரசியல்
முட்டையில் அரசியல்
செப்டம்பர் மாத தொடக்கத்தில் மத்திய பிரதேச மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை அமைச்சர் இமார்த்தி தேவி, முக்கியமான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். ஆறுமாத குழந்தைகள் முதல் ஆறுவயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். மத்திய பிரதேச மாநில குழந்தைகள் கடுமையான ஊட்டச்சது பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் உணவு அரசியலும் உண்டு. பாஜக ஆளும் மாநிலங்கள் எதிலும் முட்டை மதிய உணவில் வழங்கப்படுவதில்லை. சுத்த சைவம்தான். இதனை தங்களது கருத்தியல் சார்ந்த அரசியலாகவே பாஜகவினர் செய்கிறார்கள். இம்ராதிதேவி திடீரென மத்திய பிரதேசத்தில் முட்டை வழங்க காரணம் என்ன? அங்கு விரைவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலும் முக்கியமான காரணம்.
பாஜவில் சேர்ந்துள்ள ஜோதிராதித்யா சிந்தியாவின் விசுவாசி இவர். ஆனால் கமல்நாத் அரசில் அமைச்சராக பதவி பெற்று வேலை செய்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக இங்கு பதவியிலிருந்து பாஜக அரசு மதிய உணவு மற்று்ம அங்கன்வாடி மையங்களில் முட்டைகளை வழங்க ஒப்புக்கொள்ளவிலை. இப்போதும் கமல்நாத் அரசின் உத்தரவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.
நடக்கும் இடைத்தேர்தலில் பத்து இடங்கள் பட்டியலினத்தவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இம்ராதி தேவி கூட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சே்ர்ந்தவர்தான். இவரது முடிவை போபாலில் உள்ள திகம்பர ஜெயின் முனி சங்க சேவா சமிதி இயக்கம் தீவிரமாக எதிர்க்கிறது. இதற்கு இம்ராதி தேவி, நான் கட்சி எடுக்கும் முடிவை எதிர்க்க முடியாது. நாங்கள் இன்னும் மக்களுக்கு முட்டை வழங்கும் முடிவை எடுக்கவில்லை. முட்டை வேண்டாம் என்பவர்களுக்கு பழங்களை தரலாம் என்று நினைத்துள்ளோம். எதுவானாலும் பட்டியலின மக்கள் ஊட்டச்சத்து குறைவால் தவிப்பதை அரசுக்கு கூறுவது எனது கடமை. இதில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டா்.
தேசிய குடும்பநல சர்வே எடுக்கப்பட்டதில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் உள்ள மாநிலங்களில் ம.பி மூன்றாவது இடம் வகிக்கிறது.
முதலிடத்தில் ஜார்க்கண்ட, பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ம.பி மாநிலத்தில் முட்டை எதிர்ப்பு அரசியலால் இந்து, முஸ்லீம், ஜெயின், பட்டியலினத்தவர், ஆதிதிராவிடர்கள் என பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில சராசரியாக 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உணவை சமைத்து மாணவர்களுக்கு பரிமாறும் அமைப்புகளின் தொழில் வருமானம் 1900 கோடி உள்ளதாகவும் தகவல் கசிகிறது. தலித் மற்று்ம் பிற இனங்கள் என்று இம்ராதி தேவி இப்பிரச்னையை கையாண்டால் அவருக்கும் பாஜகவிற்கும் பயன்கள் அதிகம் என்கிறார் பத்திரிகையாளர் தீபக் திரிவேதி. காங்கிரஸ் தனது திட்டங்களையும் ஊட்டச்சத்து பிர்ச்னைகளையும் சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகிறது.
இந்தியா டுடே
ராகுல் நோரோன்காஞ
கருத்துகள்
கருத்துரையிடுக