ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆர்கனாய்டு மினி ப்ரெய்ன் ஆராய்ச்சி! - ஆட்டிசம், அல்சீமர், டிமென்ஷியா குறைபாடுகளை தீர்க்கலாம்!

 

Mechanical, Brain, Man, Machine, Manipulation
cc மூளை ஆராய்ச்சி

 

 

மினி மூளை ஆராய்ச்சி

ஆட்டிசம், அல்சீமர், சிசோபெரெனியா ஆகிய நோய்களை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் மூளை முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. மூளை பற்றிய ஆராய்ச்சி அதிகளவில் நடைபெறுவதில் உள்ள சிக்கல், அதன் அமைப்புதான். இப்போது அத்தடைகளையும் தாண்டி அதனை ஆய்வகத்தில் வளர்க்க முய்ன்று வருகிறார்கள்.

கேம்பிரிட்ஜிலுள்ள மூலக்கூறு உயிரியல் பிரிவு பேராசிரியர் மேடலின் லான்காஸ்டர் என்ற பெண்மணி, மூளையிலுள்ள ஸ்டெம்செல்களை தனியாக பிரித்து வைத்து அதனை ஆராய்ந்து வருகிறார். வியன்னாவில் முதுகலைபடிப்பிற்கு செய்த ஆராய்ச்சியின் போது விபத்தாக மூளை ஆராய்ச்சியை செய்யும் நோக்கம் தொடங்கியிருக்கிறது. கருப்பையில் மூளை எப்படி வளருகிறது என்பதைப் பற்றித்தான் லான்காஸ்டர் முதலில் ஆராய்ச்சி செய்தார். பின்னர்தான், அது மூளையை தனியாக ஆய்வகத்தில் வளர்க்கும் நோக்கத்தில் வந்து நின்றது. ஆர்கனாய்டுகளை ஆராய்ந்து வந்த லான்காஸ்டர் இப்போது மெல்ல மூளையை ஆய்வகத்தில் வளர்த்து அதன் புதிர்தன்மையை காண முயன்று வருகிறார்.

பொதுவாக எம்ஆர்ஐ ஸ்கேன்களில் கூட நாம் மூளையின் வளர்ச்சியைத்தான் பார்க்க முடியும். ஆனால் அதில் உள்ளே வரும் திசுக்கள், நியூரான்களின் தன்மையை பார்க்கமுடியாது. அதாவது, அது எப்படி வளருகிறது என்ற தன்மையை. ஆய்வகத்தில் இவற்றை வளர்க்கும்போது உண்மையில் மூளை என்று படத்தில் பார்ப்பதை விட வேறுபட்ட அனுபவமாக லான்காஸ்டருக்கு இருந்திருக்கிறது.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் செர்ஜூ பாஸ்கா, ஆர்கானாய்டுகளை 800 நாட்களுக்கு மேல் ஆய்வகத்தில் வளர்த்து மூளையின் தன்மையை சோதித்திருக்கிறார். பொதுவாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது, அதனை வெட்டியெடுத்துவிட்டு பிறகுதான் மனநல பிரச்னைகளுக்கான மருந்துகளை வழங்குகிறார்கள். உண்மையில் ஏன் இப்படி நடக்கிறது என்பதை அறியவே பாஸ்கா ஆராய்ச்சியில் குதித்திருக்கிறார்.

ஆட்டிசம், காக்காவலிப்பு ஆகிய குறைபாடுகளில் மூளையின் பங்கு முக்கியமானது. மூளையிலுள்ள நியூரான்கள் எப்படி தகவல் பரிமாறிக்கொள்கி்ன்றன என்பதை அறிந்தால் இக்குறைபாடுகளை தீர்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். இவையன்றி ஆர்கனாய்டுகளை வைத்து அல்சீமர், டிமென்ஷியா ஆகிய நோய்களை பற்றி அறியவும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. மூளையை ஆய்வகத்தில் வளர்த்து அதில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடிப்பது சரியானதுதான். ஆனால், டிமென்ஷியா மெல்ல ஒருவருக்கு ஏற்பட்டு இறுதிக்காலத்தில்தான் தீவிரமாகிறது. எனவே, இந்த ஆராய்ச்சி முழுமையாக பயன்படும் என்று கூறமுடியாது. ஆனால் ஆராய்ச்சியை மேம்படுத்த ஏதேனும் வகையில் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

புற்றுநோயைப் பொறுத்தவரை அனைவருக்கும் ஒரே விதமான மருந்து பயன் தருவதில்லை. எனவே, நோயாளியின் நோய் செல்களை வளர்த்து அதில் குறிப்பிட்ட மருந்துகளை சோதித்து பார்ப்பது, நல்லது. அப்போதுதான் அவருக்கு எந்தவிதமான மருந்து பயன் கொடுக்கிறது என்பதை அறியமுடியும்.

பிபிசி
 

கருத்துகள்