சாந்தினி ஷா
கினெக்ட் நிறுவனர், செயல்பாட்டு அதிகாரி
2011ஆம் ஆண்டு கினெக்ட் நிறுவனத்தை சாந்தினி தொடங்கினார். கினெக்ட் நிறுவனம், மும்பை, டில்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் 330 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இணையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்துவருகிறது. பியூச்சர் குழுமம், ஹாட்ஸ்டார், ஏரியல், டைட் ஆகிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றுள்ளது.
சாந்தினி, நிறுவனத்தில் உள்ள பணியாளர்களை ஒரு கம்யூனிட்டியாக வளர்த்தெடுக்க முயல்கிறார். இதற்காக பல்வேறு திட்டங்களை அவர் தனது பணியாளர்களிடையே பிரசாரம் செய்கிறார். இதன் காரணமாக, பணியாளர்களுக்கு இடையே நெருக்கமாக முடிகிறது. மேலும் சமூகத்திற்கான அக்கறையும், பல்வேறு புதிய ஐடியாக்களும் இதன் வழியாக கிடைக்கிறது.
வனிதா கேஸ்வானி
மேடிசன் மீடியா சிக்மா, இயக்குநர்
2016ஆம் ஆண்டு இம்பேக்ட் பட்டியலில் இடம்பெற்று சாதித்தவர். மேடிசன் மீடியா சிக்மாவில் 2015ஆம் ஆண்டு சேர்ந்தார். இவரது தனது நிறுவனம் மூலம் பிடிலைட், ரேமண்ட், சியட், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களை சம்பாதித்துள்ளார். தனது நிறுவனம் சார்பாக வனிதா உருவாக்கி எஸ்பிஜேஐஎம்ஆர் எனும் திட்டத்தின் மூலம் புதுமையாக யோசிக்கும் இளைஞர்களை ஈர்த்தார். இவர் உருவாக்கிய திட்டங்களில் இந்த திட்டம் முக்கியமானது.
டிவி, நாளிதழ் விளம்பரங்கள் என்று இல்லாமல் பல்வேறு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வாய்ப்புகளை உருவாக்கியவர் வனிதா.
கருத்துகள்
கருத்துரையிடுக