இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்!

 

 

 

 

Dom's Take: Who will the Farm Bill benefit? - Rediff.com ...
rediff

 

 

இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் !

சேட்டன் பகத்!

அண்மையில்தான் விவசாய மசோதாக்கள் மூன்று மக்களவையில் தாக்கலாகி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவை சட்டமாக்க குடியரசுத்தலைவரும் கூட ஒப்புதல் வழங்கி்விட்டார். இம்மசோதாக்கள் விவசாயத்துறையில் சீர்திருத்தத்தை முன்மொழிகின்றன. இதனால் மசோதாக்கள் பற்றிய விமர்சனங்கள், எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. தற்போதைய முறையில் அரசு குறைந்தபட்ச விலையை விவசாயிகளுக்கு அளிக்கிறது. அவர்கள் தங்கள் பொருட்களை தனியாருக்கு அல்லது மாநில அரசுகளின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்று வருகின்றனர். இனிமேல் அப்படி உள்ளூரில், மாநிலத்தில் விற்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. நல்ல விலை கிடைத்தால் பொருட்களை கிடங்கில் வைத்து நிதானமாக பொருட்களை விற்கலாம், மேலும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விவசாயம் செய்யமுடியும்.


சிலர் இம்மசோதாவை குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கும் முறையை ஒழிக்கிறது எனலாம். அதுதானே விவசாயிகளின் பொருட்களுக்கு விளைபொருட்களின் விலை தாழ்ந்தாலே ஏறினாலோ நஷ்டம் ஏற்படாமல் காக்கிறது என வாதிடலாம். இன்னொருவகையில் அரசிடம் விவசாயிகள் விற்றே தீரவேண்டும் என்பதை குறைந்தபட்ச விற்பனை விலை முறை கட்டாயப்படுத்துகிறது என்று கூட சிலர் கூறலாம். இதனால்தான் இம்மசோதாக்கள் பற்றி ஏராளமான சர்ச்சைகள் எழுகின்றன.

உலகிலுள்ள பல்வேறு நாடுகளைப் பார்த்தால் அவர்கள் பால், சீஸ், வெண்ணெய், தயிர், நெய், ஐஸ்க்ரீம் என பல்வேறு பொருட்களை தயாரித்து விற்கிறார்கள்.. காய்கறிகளை கூட ஹைப்பர் மார்க்கெட்டுகளில் பார்த்து வாங்கியிருப்பீர்கள். தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளைந்த விளைபொருட்களை நாம் இந்தியாவில் வாங்க முடியும். ஆனால் இந்தியாவில் விளையும் பொருட்களை பிற நாடுகளில் வாங்குவது கடினம். காரணம், அவை அப்படி விற்பனை செய்யப்பட தடைகள், விதிமுறைகள் உள்ளன.

சூப்பர் மார்க்கெட்டுகளில் பீநட் பட்டர் பார்த்திருப்பீர்கள். அதற்கு மூலப்பொருளான வேர்க்கடலை இந்தியாவில் அம்பாரமாக விளைகிறது. ஆனால் அதனை பீநட் பட்டர் போன்ற பொருட்களாக தயாரித்து விற்க அரசு உட்பட யாரும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவது இல்லை. இதற்கு முக்கியக் காரணம் நடுத்தர வர்க்க மக்கள்தான். விவசாய பொருட்களை விலை உயர்ந்தால் உடனே கத்தி கூப்பாடு போட்டு விவாதம் நடத்தி அதனை கீழே தள்ளிவிடுவது அவர்களது நெடுநாளைய வழக்கம். அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்கள் அவர்களை பிழைத்திருக்க செய்வன அல்ல. அவர்கள் மாறிவரும் உலகின் சவால்களை சமாளித்து வாழ்வதற்கானவை.

சீர்திருத்தங்களில் முக்கியமான விஷயம். இதில் தனியார்கள் உள்ளே நுழைவதுதான். அரசு மட்டுமே ஆட்சி செய்யும் விமானத்துறை, தொலைத்தொடர்புத்துறை, காப்பீட்டுத்துறை இப்போதுமே உள்ளதுதானே? அவற்றில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களால் யாரும் நஷ்டமடைந்து விடவில்லை. கணினி தொழிலில் இந்தியா வளர்ச்சி பெற்றதைப் போலவே இதிலும் வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம், மசோதாவில் எதிர்ப்பதற்கு எந்த கருத்துகளும் இல்லை என்பதல்ல அதனை நாம் காலப்போக்கில் மெல்ல சரி செய்துகொள்ள முடியும்.

இப்போது விவசாயிகளுக்கு தேவை சரியான வாய்ப்புகள். அதனை தனியார் நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்த முடியும்.இதனால் அவர்களது வாழ்க்கை மக்களின் இரக்கத்தை நம்பாமல் தன்னம்பிக்கையாக பொருளாதார பலத்துடன் நிற்க உதவும். இந்தியாவில் சிறப்பாக யாருக்கு் சிந்திக்க தெரியாமல் இல்லை. ஆனால் அரசு தனது சிந்தனையில் உருவான கொள்கைகளை காலத்திற்கேற்ப மாறுதல்களுக்கு உட்படுத்துவது இல்லை. விவசாய மசோதாக்களும் அப்படி ஒரு நிலையில் சிக்கினால், அதை நம்பியுள்ளவர்களின் பாடு திண்டாட்டம்தான்.

இனிமேல் அரசு விவசாய பொருட்களை உலகளவில் போட்டியிட்டு விற்பதன் மூலம் பெரும் நன்மை மக்களுக்குத்தான் கிடைக்கப்போகிறது. விவசாயிகளுக்கு யாரிடம் விற்கலாம் எனபதை தீர்மானிக்க முடியும், நல்ல விலையைப் பெறமுடியும். எனவே, அவர்கள் தன்மானமாக வாழமுடியும்.  


டைம்ஸ்



 




 

கருத்துகள்