எலிபெண்ட் டிசைன் நிறுவனத்தை உருவாக்கி அங்கீகாரம் பெற்றவர்! - அஸ்வினி தேஷ்பாண்டே,

 

 

 

 



 

JURY – BEMarketing Awards
அஸ்வினி தேஷ்பாண்டே

அஸ்வினி தேஷ்பாண்டே

1989ஆம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் படித்தவர். அகமதாபாத்தில் இப்படிப்பை முடித்துவிட்டு எலிபெண்ட் டிசைன் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்திற்கு இந்தியா சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உண்டு.

அஸ்வினி குளோபல் டிசைன் நெட்வொர்க் அமைப்பின் உறுப்பினர் கூட. இந்த அமைப்பு 14 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.அஸ்வினி புனேவில் நடைபெறும் டிசைன் திருவிழாவைத் தொடங்கியவர்களில் முக்கியமானவர். 


இவரின் முயற்சியல் எலிபெண்ட் டிசைன்ஸ், தொடர்ச்சியாக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. உலக சமூக தாக்க மாநாடு, ராக்பெல்லர் பௌண்டேஷன், கோபன்ஹேகன் திட்டம், டேனிஸ் டிசைன் பௌண்டேஷன் ஆகிய நிறுவனங்ங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். வடிவமைப்பு பற்றி சாகல் என்ற பத்திரிக்கைக்கை தொடர் எழுதி விரைவில் அவை தொகுப்பாக வெளிவரவிருக்கின்றன. கலர்ஸ் ஆப் ஆசியா என்ற விருது பெற்ற நூலுக்கு ஆசிரியர் இவர். இந்த நூல் ஹாங்காங்கில் வெளியானது.
 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்