நெஸ்லே இந்தியாவின் களங்கம் துடைத்து முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர்! - ராசி கோயல், வர்ஜினியா சர்மா
ராசி கோயல் |
இம்பேக்ட் 50! சாதனைப் பெண்கள்
ராசி கோயல்
மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், நெஸ்லே இந்தியா
ராசி கோயலுக்கு பொருட்கள் விற்பனைத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. லோரியல், கார்னியர், லக்மே, குளோஸ்அப் ஆகிய பிராண்டுகளை சிறப்பாக விற்பனை செய்து பிராண்டிங் செய்துள்ளார். இந்தியாவில் நெஸ்லே பிராண்டுதான் ஆறாவதாக விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்யும் பிராண்டாக உள்ளது. அதனை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல ஆஸ்க் நெஸ்லே என்ற இணையத்தளத்தை தொடங்கினார். இதில் பெற்றோர் குழந்தைகளுக்கு எந்த விதமான உணவுகளைத் தயாரித்து தருவது என பல்வேறு தகவல்களை இடம்பெற வைத்தார்.
நெஸ்லே இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவு, சாக்கெட்டுகள், உணவுப்பொருள் என பல்வேறு வகைகள் உண்டு. அவற்றையும் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்றார். நிறுவனத்தின் விளம்பரங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கியமான பங்கு வகித்து வருகிறார்.
வர்ஜினியா சர்மா
ஜியோ சாவன், பிராண்ட் சொல்யூஷன், துணைத்தலைவர்
விளம்பரத்துறையில் சர்மாவுக்கு 17 ஆண்டுகள் அனுபவம் உண்டு. 2020ஆம் ஆண்டு மே மாதத்தில்தான் ஜியோ சாவன் நிறுவனத்தின் பிராண்டு சொல்யூஷன் துணைத்தலைவராக பணியில் இணைந்தார். இதற்கு முன்னர், லிங்க்டு இன் நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு பணிபுரிந்தபோது நிறுவனத்தின் வருமானத்தை 10 சதவீதமாக உயர்த்தினார். அதுவும் மூன்று ஆண்டுகளில் என்பது முக்கியமானது.
விளம்பரம் விற்பனை சார்ந்த விஷயங்களில் இவர் காட்டும் அக்கறையும் ஐடியாக்களும் இவரை இத்துறையில் நிகரற்றவராக காட்டுகின்றன. இதனால்தான் இம்பேக்ட் இதழில் 2018 ஆம் ஆண்டு முதல் சர்மாவின் பெயர் இடம்பிடித்து வருகிறது. பல்வேறு வணிகப்பள்ளிகள், நுகர்வோர் அமைப்புகளில் தொடர்ச்சியாக பேச அழைக்கப்படும் ஆளுமையாக உள்ளது சர்மாவின் தகுதியை உணர்த்தும்.
கருத்துகள்
கருத்துரையிடுக