தந்தையின் கொலைக்கு ஊடகங்களை பழிவாங்கும் சைக்கோ மகன்! - அன்டிரேசபிள்

 

 

 

Picture of Untraceable

 

 

அன்டிரேசபிள்

பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். அவரது மகன் இதனால் பாதிக்கப்படுகிறான். சைக்கோ ஆகிறான். தனது அப்பாவின் இறப்பை வீடியோக்களாக போட்டு காசு சம்பாதித்தவர்களை பழிவாங்க நினைக்கிறான்.

விஷத்தை குளுக்கோஸில் கலந்து கொள்வது, லைட் மூலம் தோலை எரித்து கொள்வது, ஆசிட் மூலம் ஒருவரின் உடலை கரைப்பது என பல்வேறு விஷயங்களை முயன்று கொலைகளை செய்கிறான் பேராசிரியர் மகன். அதனை அவன் எப்படி செய்தான் என்பது கதை.


படம் முழுக்க நடித்திருப்பது ஜெனிஃபர், கிரிப்பின். ஆகிய  இருவரும்தான். எப்பிஐ என பந்தாவாக கோட் மட்டும் மாட்டுகிறார்கள். வழக்கில் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஜெனிஃபர் மட்டுமே ஆபீசில் வேலை பார்ப்பது போல காட்டியிருக்கிறார்கள். மற்ற அதிகாரிகள் கம்பெனியின் இயக்குநர் கூட பஞ்சாயத்து டிவில் படம் பார்க்க கூடியது போல அடிக்கடி மீட்டிங் போடுகிறார்கள். ஆனால் எதையும் உருப்படியாக பேசுவதில்லை.

படம் முழுக்க டயானே லேன்தான் வருகிறார். படத்தின் சுமையை தோளில் சும்ப்பவதும் அவர்தான். இதனால் அவரைப் போலவே நாமு்ம் சீக்கிரமே களைத்து விடுகிறோம்.

படுசோம்பல் - அன்டிரேசபிள்

கோமாளிமேடை டீம்
 


கருத்துகள்