கடல்நீர்மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? - அலசல் பார்வை

 

 

 

Wave, Seascape, Scarborough, Yorkshire, Wave Break
cc


 

 

நகரங்களை மூழ்கடிக்கும் கடல்நீர்மட்ட உயர்வு!


2100ஆம் ஆண்டில் கடல் மூலமாக ஏற்படும் வெள்ள அபாயம் 48 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தகவல் தெரிவித்துளளன.


கடந்த சில ஆண்டுகளாகவே கடல்நீர்மட்டம் உயர்நது வருவதைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இவை வெறும் பயமுறுத்தல் அல்ல என்பதற்கான சான்றுகளை, நாம் உலக நாடுகளில் கடற்கரையோர நகரங்கள்மூழ்குவதன் மூலம் அறியலாம். இதுபற்றிய ஆராய்ச்சியில் 2100ஆம் ஆண்டு கடல் அலைகள் மூலமாக கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிய வந்துளளது. இதன்மூலம் ஏற்படும் சொத்துக்களின் பாதிப்பு காரணமாக 20 சதவீத பொருளாதார இழப்பு ஏற்படும் எனறும் எப்ரு கிரெஸி, லான் யங் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சி அறிக்கையில் சுடடிக்காட்டப்பட்டுளளது.


பாதிப்பைக் கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களை குறைக்கவேண்டும். அடுத்து, கடல்நீர் நகரங்களுக்குள் புகாதபடி சுவர்களை கட்டலாம் என பல்வேறு ஆலோசனைகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. கடல்நீர் மட்டம் உயருவதற்கான முக்கிய காரணம், வெப்பநிலை உயர்வு, துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது ஆகும். அதேசமயம் கடல்நீர் சுற்றுபபுறத்திலுளள வெப்பத்தை உள்வாங்கி விரிவடைகிறது. இதனால் ஆண்டுக்கு 4 மி.மீ அளவுக்கு கடல்நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக புயல் ஏற்படும்போது கடும் வெள்ள பாதிப்பு கடலோர நகரங்களுக்கு ஏற்படுகிறது. அங்கு வாழும் மக்கள், அவர்களின் வாழிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 2100 இல் ஏற்படும் பாதிப்பு என்றாலும் கூட அதற்கான அறிகுறிகளை இனிவரும் காலத்திலேயே நாம் பார்ககமுடியும்.


கடல்நீர் மட்டம் உயர்ந்து ஏற்படும் வெள்ள பாதிப்பால், உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேர், உயிர் பலி, வாழிடங்கள் இழபபு என கடும் இழப்பைச் சந்திபபார்கள். மொத்தமாக 20 சதவீத பொருளாதார இழப்பு, உலக நாடுகளில் ஏற்படும். ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதி, குயின்ஸ்லாநது கடற்கரைப் பகுதி, ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதி, சீனாவின் தென்கிழக்குப்பகுதி, இந்தியாவில் மேற்கு வங்காளம், குஜராத், வங்கதேசம், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்காவின் மாகாணங்களாகிய மேரிலேண்ட், கரோலினா, வர்ஜீனியா ஆகியவையும் கடல்நீர்மட்ட பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளன. கடல்நீர்மட்டம் அதிகரிப்பைக் கவனித்து இந்திய அரசு நடவடிககை எடுப்பது அவசியம்.


phys.org




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்