தனது குடும்பத்தை அழித்தவர்களை அழிக்க போராடும் சிறுமி - பிளாக் ஃபாக்ஸ்
black fox
japan anime
ரிக்கா இசுகுரா, அவளது குடும்பத்தின் ஒரே வாரிசு. தாத்தா, பழைமையான தற்காப்புக்கலைகளை அவளுக்கு சொல்லிக்கொடுக்கிறார். அதேசமயம் போரிடும்போது எப்போதும் கருணை காட்டாதே என்று சொல்லிக்கொடுக்கிறார். ரிக்காவின் தந்தை ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சியாளர். அவர் உருவாக்கும் நாய், கழுகு, அணில் ஆகிய ட்ரோன்களை போரில் பயன்படுத்த அவரது நண்பர் பிராட் நினைக்கிறார். ஆனால் ரிக்காவின் தந்தை அதற்கு மறுக்க, அவரது வீட்டில் நுழைந்து அவர்களைக் கொன்று ஆராய்ச்சிக்கான தகவல்களை எடுத்துக்கொண்டு வெளியேறுகின்றனர். இந்த முயற்சிக்கு என்ன செய்கிறோம் என்பது பற்றிய நினைவு இன்றி வெகுளியாக உதவுகிறாள் ரிக்கா.
நடக்கும் சண்டையில் சக ஆராய்ச்சியாளர் லாரன், அவரது மகள் மியாவின் சக்தியால் ரிக்காவின் தாத்தா இறந்துவிடுகிறார். ரிக்காவின் அப்பா, சுடப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அவர் முன்னமே கணினியை இயக்கி தனது ஆராய்ச்சியைக் காப்பாற்றி விடுகிறார். அவரது காவல் ட்ரோன்கள் ரிக்காவை காப்பாற்றி அழைத்து செல்லுகின்றன. ரிக்கா எப்படி பிராட்டை பழிவாங்குகிறார் என்பதுதான் ஒரு மணிநேர படத்தின் கதை.
ரிக்கா தனது பெயரை லில்லி என்று சொல்லிவிட்டு மெலிசா என்ற தோழியின் அறையில் தங்குகிறாள். அங்கு தங்கி டிடெக்டிவு ஏஜென்சி ஒன்றில் வேலை செய்தபடி, பிராட், லாரனை தேடுகிறாள். எதற்கு? அப்பாவின் ஆராய்ச்சி தகவல்களை திரும்ப பெறுவதற்குத்தான். இந்த லட்சியம் நிறைவேறியதா? என்பதுதான் கதை.
தாத்தா, அப்பா, உறவு, நட்பு என பல்வேறு விஷயங்களை பேசும் படம் இது. சண்டைக் காட்சிகள் அனைத்தும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த பாகத்தில் பிராடை எதிர்பார்கள் என யூகிக்கும் படி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக