அகதி சிறுவனைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஆறு மாணவர்களின் வீரச்செயல்! - 7 டேஸ் வார்- அனிமேஷன்
7 டேஸ் வார்! |
7 டேஸ் வார்!
ஜப்பான் அனிமே
மாமோரு கானுக்கு, தன்னுடைய வகுப்பில் கூடவே படிக்கும் தோழி மீது காதல். ஆனால் அதனை நேரடியாக சொல்ல துணிச்சல் இல்லை. நிறைய படிப்பவன். நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவன். ஆனால் அவன் சொல்வதை காதுகொடுத்து கேட்க கூட அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை. இந்த நிலையில் அவனது பள்ளித்தோழி கான் வாழும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவளின் பிறந்த நாளும் வருகிறது. இதனைப் பயன்படுத்தி அவளை இம்ப்ரெஸ் செய்ய கான் முயல்கிறான். இதற்காக பயன்பாட்டில் இல்லாத தொழிற்சாலை ஒன்றுக்கு ஜாலியாக செல்ல திட்டமிடுகிறார்கள். அங்கு தோழியின் நண்பர்கள் அனைவருமே வருகிறார்கள். ஒரே வகுப்பில் இருந்தாலும் கூட அதிகம் பேசிப்பழகாத ஆட்கள். அங்கு வாழும் தாய்லாந்து சிறுவன், பெற்றோரை தவறவிட்டு அவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். அவனைப் பிடிக்க ஜப்பான் குடியுரிமைத்துறை முயற்சிக்கிறது. கான் தலைமையில் அவனது நண்பர்கள் ஒன்று திரண்டு அந்த தொழிற்சாலையில் அச்சிறுவனைக் காக்க முயல்கிறார்கள். இது தேசிய அளவில் செய்தியாக, அச்சிறுவனின் பெற்றோர் கிடைத்தார்களா இல்லையா என்பதுதான் அனிமேஷன் படத்தின் கதை.
7 டேஸ் வார்! |
நிறைய விஷயங்கள் தெரியும். ஆனால் அதனை எப்படி பிறருக்கு சொல்லுவதென கானுக்கு தெரியாது. அந்த விரக்தியோடு படத்தின் பாதி வரையிலும் வருகிறா்ன். ஆனால் தொழிற்சாலையில் நுழைந்தவுடன் தொடக்கத்தில் சாதாரணமாக இருந்தாலும் பின்னர் அக்கூட்டத்திற்கே சிங்கமாக தலைமை ஏற்று அனைவரையும் வியக்க வைக்கிறான். சிறுவனைக் காப்பாற்றும் நோக்கத்தில் அனைத்து வேறுபாடுகளும் காணாமல் போக, அனைவரும் நண்பர்களாகிறார்கள். அனைவரும் மனம் விட்டு பேசும் இறுதிக்காட்சியில் முக்கியமான டிவிஸ்ட் உண்டு. அனைவரும் மனந்திறந்து பேசும் காட்சி அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.
மறக்கமுடியாத அனுபவம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக