ஊடகங்களின் அத்தனை பிரிவுகளிலும் பணியாற்றிய பெருமை கொண்டவர்! - அபர்ணா புரோகித், அமேசான் ஒரிஜினல்ஸ்
அபர்ணா புரோகித் |
அபர்ணா புரோகித்
அமேசான் பிரைம் வீடியோ இந்தியா, இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர்
இவரது தலைமையின் கீழ் அமேசானில் ப்ரீத், காமிக்ஸ்தான்,ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மிர்சாபூர், மேட் இன் ஹெவன், தி ஃபேமிலி மேன், பாதாள் லோக் ஆகிய தொடர்களை வெற்றிகரமாக உருவாக்கி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்படத்துறையில் பரத் பாலா, அபர்ணா சென் ஆகியோருக்கு கீழே உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அபர்ணா. பின்னாளில் படத்தின் தயாரிப்பு விஷயங்களில் பங்கேற்கத் தொடங்கினார். இப்படித்தான் 2006ஆம் ஆண்டு சோனி டிவிக்குள் நுழைந்தார். சிஐடி, ஃபியர் பேக்டர், கைஸா யே பியார் ஹை ஆகிய தொடர்களுக்கு எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளராக செயல்பட்டார். அதன் பின்னர் யூடிவி மோஷன் பிக்சர்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட், மும்பை மந்திரா மீடியா லிட். மகிந்திரா குழுமத்தின் சினிஸ்தான் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளார். இவை மட்டுமன்றி, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளிதழ்களிலும் பணியாற்றியுள்ளார். அடுத்து எப்எம் கோல்டு, ரெயின்போ, டில்லி ஆகியவற்றிலும் பணியாற்றினர். விளம்பர நிறுவனங்களிலும் பணிபுரிந்த அனுபவத்தையும் கொண்டவர். 2015ஆம்ஆண்டு எபிக் டிவியில் இவர் தயாரித்த ஜானே பேச்சானே வித் ஜாவேத் அக்தர் என்ற உரையாடல் நிகழ்ச்சி முக்கியமானது.
கருத்துகள்
கருத்துரையிடுக