இடுகைகள்

தேதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரும் வாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஆளுமைகள், தினங்கள்!

படம்
pixabay அகஸ்டோ போல் மார்ச் 16,1931 பிரேசில் நாட்டு நாடக கலைஞர்.  இடதுசாரி கருத்துகளைச் சொல்ல தியேட்டர் ஆஃப் தி ஆப்ரஸ்டு என்ற நாடக அமைப்பைத் தொடங்கினார். நாடக வடிவங்களைப் பற்றியும், தனது அரசியல் செயற்பாடு பற்றியும் நூல்களை எழுதியுள்ளார். தேசிய தடுப்பூசி தினம் மார்ச் 16,1995 இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று போலியோ இல்லாத நாடாக இந்தியாவை, உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. நோர்பட் இல்லியக்ஸ் மார்ச் 17, 1806 நோர்பட் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், வேதியியல் பொறியியலாளர். இவர், சர்க்கரை தொழில்துறைக்காக கண்டுபிடித்த மல்டிபிள் எஃபக்ட் எவாபெரேட்டர் இவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. எகிப்து நாட்டின் தொன்மை வரலாறு பற்றிய ஆய்வையும் செய்து வந்தார். ரிச்சர்ட் பி ஸ்ட்ராங் மார்ச் 18, 1872 அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். பிளேக், காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள