ஜோசப் ஸ்டாலின், லெனின் கனவான சோவியத் யூனியனை எதிரிகளை களையெடுத்து கட்டமைத்த கதை!
சர்வம் ஸ்டாலின் மயம் மருதன் கிழக்கு பதிப்பகம் ஜோசப் ஸ்டாலின், சோவியத் ரஷ்யாவை எப்படி வளர்த்தார், எதிரிகளை உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து ஒழித்தது எப்படி, உண்மையில் அவர் சர்வாதிகாரிதானா என்பதை நூல் விளக்கிச்சொல்கிறது. 139 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல்தான். நூலின் தொடக்கத்தில் ட்ராட்ஸ்கி என்பவரை உளவுத்துறை அதிகாரி, ஐஸ்கத்தியால் குத்திக் கொல்கிறார். ஏன் அப்படி கொன்றார் என்ற கேள்வியோடு தொடங்குகிறது கட்டுரைநூல், ஒரு புனைவு நூலைப்போல கட்டுரை நூலை கட்டமைத்திருக்கிறார்கள். ஆனால், நூல் இறுதிவரை அப்படி செல்லவில்லை. நூலில் ஸ்டாலின் செய்த போராட்டங்கள் ஓரளவுக்கு கூறப்பட்டுள்ளன. அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிக முக்கியத்துவம் தரவில்லை. அதை தனியாக பிரித்து விவரித்திருக்கலாம். அவர் எழுதிய நூல்களோ, பேசிய உரைகளோ, அல்லவது அவரைப்பற்றி உள்நாட்டில், வெளிநாட்டில் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியோ கூட எந்த குறிப்புகளும் இல்லை. ஸ்டாலின் மரணம் கூட சட்டென நடந்தது போன்று இருக்கிறது. எதற்கு இந்த அவசரம் என நூலாசிரியர் மருதன்தான் விளக்கி கூறவேண்டும். லெனின், துப்பாக்கியால் சுடப்பட்டு 1924ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். அதற...