இடுகைகள்

இந்தியா - அணைநீரில் சோலார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அணைநீரில் சோலார் மின்சாரம்!

படம்
மின்சாரம் தயாரிக்க புதுமையான ஐடியா!  தமிழ்நாட்டின் மின் விநியோக நிறுவனமான டான்ஜெட்கோ(TANGEDCO) தமிழ்நாட்டிலுள்ள அணைகளில் சோலார் பேனல்களை நிறுவ உள்ளது. நிலம் இருக்க நீர் எதற்கு? சோலார் பேனல்களை நிலத்திலேயே நிறுவலாமே என்று நினைப்பீர்கள். இதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவது, வாடகை என செலவு எகிறுவதால் டான்ஜெட்கோ இந்த முடிவை எடுத்துள்ளது. நிலத்தை விட நீரில் வெப்பத்தைப் பெற்று மின்சாரம் தயாரிப்பது எளிது.  தமிழ்நாட்டிலுள்ள மேட்டூர் அணை, வைகை அணை, பவானி சாகர் அணை ஆகியவற்றில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக பெருமளவில் சோலார் பேனல்களை டான்ஜெட்கோ நிறுவுவதற்கான முயற்சிகளைத் தொடங்கி உள்ளது. மொத்தம் 250 மெகாவாட் மின்சாரத்திற்கான திட்டம் இது. புதிய திட்டங்கள் தேவை! இந்தியாவில் முதன்முறையாக அணைநீரில் பிரமாண்ட அளவில் சோலார்பேனல்களை நிறுவி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு, ரிகாந்த் அணையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் 50 மெகாவாட் மின்சாரத்தை தனியார் நிறுவனம் யூனிட் ஒன்றுக்கு 3.29 ரூபாய்க்கு விற்கிறது. காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம