இடுகைகள்

ஹைப்பர்சோனிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயத்தில் முந்தும் சீனா!

படம்
  ஹைப்பர்சோனிக் ஆயுத பந்தயம்! கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனா, ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்த்தது. இதைப்பற்றி ஃபினான்சியல் டைம்ஸில் கட்டுரை வெளியானது. அதில், இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை கொண்டு செல்ல முடியும் என்று கூறப்பட்டது. இதுபற்றிய கேள்விக்கு சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ஆராய்ச்சியில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈடுபாடு காட்டி வருகின்றன.  ஒலியை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்டவை ஹைப்பர் சோனிக் ஆயுதங்கள். மாக் (mach ) என்ற அலகில் இதனை அளவிடுகிறார்கள். மாக் 1  என்பது ஒலியின் வேகம், மாக் 1லிருந்து மாக் 5 வரை சூப்பர் சோனிக், மாக் 5க்கும் அதிகமான வேகம் கொண்டவை ஹைப்பர்சோனிக் என்று வல்லுநர்கள் வரையறுக்கின்றனர்.  கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகளுக்கு குறிப்பிட்ட இலக்கு உண்டு. அதற்கான வழிமுறையில் பயணிக்கும். இதை ரேடார்களால் கண்டுபிடிக்க முடியும். தாக்கப்படும் நாட்டின் பாதுகாப்பு ரேடார்கள், ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் ஹைப்பர் சோனிக் ஆயுதங்களை அருகில் வந்தபிறகே கண்டுபிடிக்க முடியும். இவற்றில் இரு வகைகள்(HGV,HCM) உண்டு. ராக்கெட்