இடுகைகள்

அணு உலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொருட்களை திரும்ப பயன்படுத்தும் வட்டப் பொருளாதாரம்!

படம்
  வட்ட பொருளாதாரம் ஒரு பொருளைப் பயன்படுத்திவிட்டு அதை அப்படியே பயன்பாடு முடிந்ததும் தூக்கிப்போட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவது சூழல் பிரச்னையை தீவிரமாக்குகிறது. இதற்கு எதிரானது, வட்டப் பொருளாதாரம். அதாவது சர்குலர் எகனாமி. இக்கருத்துப்படி, மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து அதைப் பயன்படுத்துவது, பிறகு அந்தப் பொருளை மீண்டும் மறுசுழற்சி செய்வது ஆகியவை உள்ளது. இதனால், கழிவுகள் உருவாவது குறைக்கப்படும். இதன்மூலம் இயற்கை சூழல் கெடுவது பெருமளவு குறைக்கப்படுகிறது. லீனியர் எகனாமி முறையில் பொருட்கள் பயன்பாடு முடிந்ததும் நேரடியாக குப்பைக்கு சென்றுவிடுகிறது. அதில் பயன்பாடு ஏதுமில்லை. அந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதும் கடினம். இந்த முறையில்தான் பல நூற்றாண்டுகளாக தொழில் உற்பத்தி நடைபெற்று வந்தது. நன்னீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது தொடங்கப்பட வேண்டும். அல்லது நீர்த்தேவையைக் குறைத்து சிக்கனமாக செயல்படுவது முக்கியம். பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்காத வகையில் வாகனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற மோசமான விபத்துகள்

படம்
  பிரிட்டனில் நடைபெற்ற சுரங்க விபத்து   மோசமான சுரங்க விபத்து என்பது பிரிட்டனில் நடந்த ஆண்டு 1966. இங்கு அபெர்ஃபான் என்ற கிராமப் பகுதியில் சுரங்கம் ஒன்று தோண்டப்பட்டு செயல்பட்டு வந்தது. சுரங்க வேலைக்காக வந்த மக்கள் அங்கேயே தங்கத் தொடங்கினர். இதனால் அங்கு மக்கள்தொகையும் அதிகரித்து வந்தது. சுரங்கம் தோண்டுபவர்கள் அதில் உருவாகும் கழிவை முறையாக அப்புறப்படுத்தவேண்டும். ஆனால் பெரும்பாலும் அதற்கு தனியாக வேறு செலவழிக்க வேண்டுமாக என அங்கேயே அருகில் உள்ள இடங்களிலேயே கழித்துக் கட்டுவது வழக்கம். அப்படித்தான். இந்த சுரங்கத்தில் உருவான கழிவுகளையும் கிராமத்தில் குவித்து வைத்தனர். அது பெரிய பிரச்னையாகவெல்லாம் இல்லை. அதுவும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 1966 வரைதான். அப்போதுதான் அங்கு 17 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் நிலம் மென்மையாக குழைந்துபோய் கிடந்தது. கழிவுகள் உயரமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அவை அப்படியே கீழே பள்ளமாக இருந்த கிராமத்தை நோக்கி வரத் தொடங்கின. இப்படி வந்த சுரங்க கழிவுகளின் மேகம் மணிக்கு 21 மைல். பள்ளி, மருத்துவமனை, 18 வீடுகள் என அனைத்தையும் சுரங்க கழிவுகள் மேலே விழுந்து உடைத்த

இந்திய அரசின் தூய ஆற்றல் திட்டம்!

படம்
  தூய ஆற்றலை நோக்கி நகரும் இந்திய அரசு! இந்தியாவின் மின்சாரத் தேவை, 2020ஆம் ஆண்டிலிருந்து இருமடங்காகி உள்ளதாக உலக ஆற்றல் முகமை (IEA) தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா, இன்றுவரையும் கூட மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நிலக்கரியின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. பெருந்தொற்று காரணமாக முடங்கிய நிலக்கரி சுரங்கப்பணிகள் இயங்கத் தொடங்கிவிட்டன. தொழில்துறையினரும் முழுவீச்சில்  இயங்கத் தொடங்கிவிட்டனர்.  இதனால் மின்னாற்றலின் தேவை அதிகரித்துள்ளது. 2040ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சாரத் தேவை, 5 சதவீதமாக உயரும் என உலக ஆற்றல் முகமை மதிப்பிட்டுள்ளது.  பிற ஆற்றல் ஆதாரங்களை விட நிலக்கரி சுரங்கங்களை அமைக்க குறைந்த முதலீடு போதுமானது.  தூய ஆற்றல் ஆதாரங்களான சோலார், நீர், அணுசக்தி ஆகியவை அதிக நிர்மாண முதலீடுகளைக் கொண்டவை. எனவே, மலிவான நிலக்கரித் தொழிலில் தொழிலதிபர்களின் முதலீடுகளும் அதிகம்.   மத்திய அரசு, 2021-22 காலகட்டத்தில் 3,793 கோடி ரூபாயை (மார்ச் 14 ) தூய ஆற்றல் ஆதாரங்களை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது. 2029 -30 காலகட்டத்தில் இந்தியாவின் தூய ஆற்றல்  பங்களிப்பு 40 சதவீதமாக இருக்கும் என மத்திய மின்துறை ஆணையத்

சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணு உலை!

படம்
  இகோர் குர்சாடோவ் முதல் அணுஉலை  இன்று வளர்ந்த நாடுகள் அமைதி என்று பேசுவதற்கு காரணமே, முதுகுக்கு பின்னால் வைத்துள்ள அணு ஆயுதங்கள்தான். யாராவது அமைதிக்கு மறுத்தால் அடுத்த அடி மரண அடியாக, அந்நாட்டின் மீது அணு குண்டுகளை வீசுவார்கள். இதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்க நாடு நடத்திய தாக்குதலைக் கூறலாம். அந்த நாட்டின் பல தலைமுறைகள் கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். இரண்டு குண்டுகளை வீசி அந்நாட்டை முழுமையாக அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அமெரிக்காவைத் தாண்டி ஜப்பான் இன்று உழைப்பால் பல படிகள் உயர்ந்து நிற்கிறது.  இரண்டாம் உலகப்போர் சமயமே அணு உலை சார்ந்த முன்னேற்றங்கள் தொடங்கிவிட்டன. வெடிகுண்டுகள் தயாரிக்க மட்டுமல்ல. அணுசக்தியை பயன்படுத்தி அணு இணைப்பு, பிளப்பு முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  முதல் அணு உலை சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் ஆண்டு உலகில் முதன்முறையாக மின்சாரம் தயாரிப்பதற்கென நிறுவப்பட்ட அணு உலை இதுவே. இந்த ஆண்டோடு சோவியத் யூனியனில் அணு உலை நிறுவப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. இதன் செயல்பாடு 1954 தொடங்கி 2002 ஆம் ஆண்ட