இடுகைகள்

கஜூராஹோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்த வாரத்தில் நடைபெறும் விழாக்கள்!

படம்
இந்த வார விழாக்கள்! தாஜ் மகோத்சவ் பிப்.18 – -27 உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா. இந்தியக் கலாசாரம், கைவினைப் பொருட்கள், உணவுத் திருவிழா, ஒட்டகச் சவாரி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெளிநாட்டினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். மாசாட்டு மாமங்கம் பிப்.20 கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் திருவானைக்காவு கோவிலில் நடைபெறும் விழா. ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், குதிரகோலம் எனும் குதிரை பொம்மைகளை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார்கள். மாலையில் இங்கு பாரம்பரிய யானைகளின் அணிவகுப்பு  முக்கிய அம்சமாகும். கஜூராகோ நடனத் திருவிழா  பிப்.20 – -26  1975ஆம் ஆண்டிலிருந்து கஜூராகோவிலுள்ள கோவில்களின்  பின்னணியில் நடைபெறும் நடனத் திருவிழா. மத்தியப் பிரதேசத்திலுள்ள கஜூராகோவின் விஸ்வநாத, சித்ரகுப்தா கோவில்களில் நடனங்கள் நடத்தப்படுகின்றன. அனுமதி இலவசம். மகா சிவராத்திரி பிப்.21 இந்தியாவிலுள்ள சிவபக்தர்கள் கொண்டாடும் விழா. சூரிய உதயத்தில் எழுந்து, விரதமிருந்து கங்கை ஆற்றில் குளித்துவிட்டு சிவனின் கோவில்களுக்குச் செல்வார்கள்.