இடுகைகள்

திட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

படம்
              இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு முடவன் குட்டி முகமது காலச்சுவடு மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ் நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு

சட்டம் போட்டால் திருந்துவார்களா? சிஎஸ்ஆர் 5

படம்
 சமூக பொறுப்புணர்வுத் திட்டம் 5 சட்டங்களால் சமூகப் பொறுப்புணர்வு அதிகரிக்குமா? சட்டம் போட்டால் திருந்துவார்களா? இந்திய அரசு, அண்மையில் சமூக பொறுப்புணர்வுத் திட்டம் பற்றிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெருநிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுக்காக ஒதுக்கிய 2 சதவீத நிதியைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலவழித்தே ஆகவேண்டும். மூன்று நிதியாண்டுகளுக்குள் நிதியை செலவழிக்காதபோது, அந்நிதியை அரசுக்கு வழங்கவேண்டும். மேலும் விதிமீறலுக்கு அபராதமாக 50 ஆயிரம் முதல் 25 இலட்சம் ரூபாய் விதிக்கப்படவிருக்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு சிறையிலும் அடைக்க முடியும் எனக் கூறும் அரசு விதிகள் பயமுறுத்துகின்றன. சமூகநலநோக்கில் நிதி செலவழிக்கும் நிறுவனங்களைக் கூட காலக்கெடு விதித்து அரசு மிரட்டுகிறது என வணிக வட்டாரங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 5 கோடி லாபம் சம்பாதிக்கும் அல்லது 500 கோடி முதல் 1000 கோடி மதிப்பிலான நிறுவனங்கள் கட்டாயமாக 2 சதவீத தொகையை சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிடுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. “2024 ஆம் ஆண்டுவரை பெருநிறுவனங்களுக்கு காலக

சமூகத்திட்டங்களை எப்படி திட்டமிடுகிறார்கள்? சிஎஸ்ஆர் 3

படம்
அத்தியாயம் 3 பெருநிறுவன சமூகப் பொறுப்பு! திட்டமிடுவது எப்படி? சமூகப் பொறுப்புத் திட்டத்தில் திட்டங்கள் தீட்டுவது, அதற்கான நிதி ஒதுக்குவது ஆகியவற்றோடு சில முக்கிய அம்சங்களும் உண்டு.  சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதோடு நிறுவனங்களின் பொறுப்பு முடிந்துவிடாது. திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான குழுக்களை உருவாக்க வேண்டும். இவர்கள்தான் நிறுவனங்களின் திட்டங்களை மக்களுக்கு ஏற்றபடி உருவாக்கி உதவுவார்கள். அடுத்து, ஊழியர்களுக்கான வேலை விதிமுறைகள், தீண்டாமை அகற்றுதல், சூழல் பாதுகாப்பு ஆகியவையும் இதில் உள் அடங்கலாக உள்ளன. உலக நாடுகளில் இந்தியாவில் மட்டும்தான் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதில் செலவழிக்கப்படாத நிதி, அரசு கணக்குக்கு மாற்றப்படுவதும் கூட ஒருவகை வரி என்றே நிறுவனங்கள் நினைக்கக்கூடும். பெருநிறுவனங்கள் அளவுக்கு சிறுகுறு நிறுவனங்களிடம் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களை வலியுறுத்த முடியாது. காரணம், அவர்களின் தொழில்முதலீடு சிறியது என்பதால்தான். ஆனால் இன்று சிறு நிறுவனங்கள் உள்ளூர் மக்களிடம் சமூகத் திட்டங்களை செயற்படுத்துவதில்

அபிஜித் கருத்து என்ன?

படம்
ஷங்கர் படத்தில் தொடங்கிய பழக்கம் இது. யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு கருத்து மனதில் இருக்கும். அதனைச் சொல்லியே ஆக வேண்டும் என வற்புறுத்துவது. விளைவு, படுமோசமாகத்தான் இருக்கும். கேள்வி கேட்டவருக்கு அல்ல, பதில் சொன்னவருக்கு. இம்முறையில் அபிஜித்திடம் பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களை கேட்டுள்ளனர். இதில் அவர் என்ன நினைக்கிறார் என்பது படித்தால் உங்களுக்கே புரிந்துவிடும். பணமதிப்பு நீக்கம்! இந்த நடவடிக்கையின் பின்னுள்ள லாஜிக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட வேண்டும்? இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது அதிகமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தன்னைவிட கருப்புபணம் வைத்திருப்பவர்கள் அதிகம் கஷ்டப்படுவார்கள் என்று மக்கள் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் வெளியிட்ட பணத்தில் 97 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கே திரும்பிவிட்டது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். பணக்காரர்களுக்கு அல்லது கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களுக்கு  என்ன கஷ்டம் நேர்ந்திருக்குமென்று.... பொருளாதாரரீதியில் அரசு செய்த முட்டாள்தனங்களில் ஒன்று பணமதிப்பு நீக்கம். உண்மையில் இந்

எலிப் படுகொலை! - பிரெஞ்சு காலனி தேச காமெடி!

படம்
வியட்நாம் தலைநகரான ஹனோய் அப்போது பிரெஞ்சு வசம் இருந்தது. பொதுவாக காலனி ஆதிக்க சக்திகளுக்கு, மக்களின் வரிப்பணத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடிப் பார்க்க எப்போதுமே ஆசை உண்டு. ஓஷோ சொன்ன கோழியின் சிறகுகளைப் பிடுங்கிப்போட்ட கதை உதாரணம். இங்கும் அப்படி ஒரு ஆட்சியாளர் என்ன செய்தார், தெரியுமா? நகரமயமாக்கலுக்கு ஆசைப்பட்டார். ஆனால் செயல்படுத்தியதில் சின்ன சிக்கல் ஏற்பட்டுவிட்டது. விளைவு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். பால் டூமோர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அவரை வியட்நாமின் ஹனோய் நகருக்கு நிர்வாக அதிகாரியாக நியமித்தனர். நாகரிக நகருக்கு முதல்படி என்ன கழிவறையும் சாக்கடையும்தானே! ஆம் உடனே ஆட்களைத் திரட்டி பதினான்கு கி.மீ. நீளத்திற்கு சாக்கடை ஒன்றை பிரமாதமாகக் கட்டினார். நகரை பிரமாதமான உயரத்திற்கு உயர்த்திவிட்டதாக நினைத்தார் பால் டூமோர். அவருக்கு மான்ஸ்டர் வில்லனாக வந்தது, வேறு யாருமில்லை எலிகள்தான். சிறப்பான வாழிடமாக சாக்கடைக் குழாய்களைத் தேர்ந்தெடுத்தன. ஒரு கட்டத்தில் உணவுப்பிரச்னை எழ, அதுதான் மாம்ஸ் இருக்கிறார்களென நேரடியாக மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்தன. உணவுக

ரோஷினி - வட இந்திய மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி- கேரளச்சாதனை!

படம்
எர்ணாகுளத்தில் மாணவர்களுக்கு கல்வி! இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தாய்மொழிக்கல்வி! கேரள அரசு, அரசுப்பள்ளிகளில் வட இந்திய  மாணவர்களுக்கு,  அவர்களது தாய்மொழியையும், அதன்வழியாக மலையாள மொழியையும் கற்றுத்தருகிறது. கேரள அரசு, ரோஷினி என்ற திட்டத்தை அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயற்படுத்தி வருகிறது. இதன்நோக்கம், பிறமொழி மாணவர்களுக்கு தத்தமது தாய்மொழி மற்றும் மலையாளத்தைக் கற்பிப்பது ஆகும்.  நாற்பது தன்னார்வலர்களின் உதவியுடன் அரசு, 38 பள்ளிகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. கேரளத்தில் 2013ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, மேற்கு வங்காளம் (20%), பீகார் (18.10%), அசாம் (17.28%), உ.பி (17.28%) ஆகிய அளவுகளில் வட இந்தியர்கள் வாழ்கின்றனர். மலையாளத்தைப் புரிந்துகொண்டால் பணியாற்றுவது எளிது என்ற முயற்சியில் அரசு, ரோஷினி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தன்னார்வலர்களான ஆசிரியர்கள்  2017ஆம் ஆண்டு எர்ணாக்குளம் மாவட்டத்தில் அறிமுகமான திட்டத்தால், 48 சதவீத அளவுக்கு மாணவர்களின் இடைநிற்றல் அளவு குறைந்திருக்கிறது. கேரள அரசு, வட இந்தியர்களால் பொருளாதார பலம் பெற்றிருக்கி

சட்டம் போட்டால் சமூக பொறுப்புணர்வு கூடுமா?

படம்
mallenbaker.net சட்டங்களால் சமூகப் பொறுப்புணர்வு அதிகரிக்குமா? இந்திய அரசு, அண்மையில் சமூக பொறுப்புணர்வுத் திட்டம் பற்றிய சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெருநிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுக்காக ஒதுக்கிய 2 சதவீத நிதியைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலவழித்தே ஆகவேண்டும். மூன்று நிதியாண்டுகளுக்குள் நிதியை செலவழிக்காதபோது, அந்நிதியை அரசுக்கு வழங்கவேண்டும். மேலும் விதிமீறலுக்கு அபராதமாக 50 ஆயிரம் முதல் 25 இலட்சம் ரூபாய் விதிக்கப்படவிருக்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு சிறையிலும் அடைக்க முடியும் எனக் கூறும் அரசு விதிகள் பயமுறுத்துகின்றன. சமூகநலநோக்கில் நிதி செலவழிக்கும் நிறுவனங்களைக் கூட காலக்கெடு விதித்து அரசு மிரட்டுகிறது என வணிக வட்டாரங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 5 கோடி லாபம் சம்பாதிக்கும் அல்லது 500 கோடி முதல் 1000 கோடி மதிப்பிலான நிறுவனங்கள் கட்டாயமாக 2 சதவீத தொகையை சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிடுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.  “2024 ஆம் ஆண்டுவரை பெருநிறுவனங்களுக்கு காலக்கெடு உள்ளது. அவர்கள் செலவிடாத பணம் அரசின் பொருள