இடுகைகள்

வெய்ட்டோமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குகைளை ஒளிர வைக்கும் புழுக்கள்!

படம்
புழுக்களால் ஒளிரும் குகை!  நியூசிலாந்தின் வடக்கு தீவுப்பகுதியில் வெயிட்டோமோ (Waitomo) என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக்கல் குகைகளைப் பார்க்கும்போது, சாதாரணமாகவே தோன்றும். ஆனால் இவைதான், உலகிலுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன.  வெயிட்டோமோ குகைகளின் சிறப்பு அம்சம், அதன் சுவர்களும் மேற்புறங்களும்தான். இவை குளோவார்ம் (Glowworms) எனும் ஒளிரும் புழுக்களால் நீலநிறத்தில் ஒளிர்கின்றன. இக்காட்சியைப்  பார்க்கவே உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குகைகளைப் பாதுகாக்க அதன் வெப்பநிலையும் அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவும் அரசால் சோதிக்கப்பட்டு வருகிறது. வெயிட்டோமோ குகையின் மேற்புர கூரையிலிருந்து வளரும் பாறைகளுக்கு விழுதுப்பாறை (Stalactites) என்று பெயர். கீழ்ப்புறத்திலிருந்து செங்குத்தாக வளருபவைக்கு புற்றுப்பாறை (Stalagmites) என்று பெயர். மழைநீர் மற்றும் பாறைகளிலுள்ள கனிமங்களின் சேர்க்கையால், வினோதமான பாறை அமைப்புகள் உருவாகின்றன.  ஒளிரும் புழுக்கள் முழு வளர்ச்சி பெற்றால், ஃபங்கஸ் நாட் (Fungus gnat) இன வகை பூச்சியாக உருமாறுகிறது. இப்பூ