இடுகைகள்

ஈரான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஈரானிய அரசு கொடூரமான முறையில் போராட்டக்காரர்களை அச்சுறுத்தி உண்மையை மறைக்க முயல்கிறது - நர்கேஸ் மொகம்மதி

படம்
  நர்கேஸ் மொகம்மதி நர்கேஸ் மொகம்மதி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் உங்களுடைய இளமைக்காலத்தை நினைத்துப்பார்க்கும்போது, ஈரானிய குடும்பம் இப்படித்தான் இருக்கும் என நாங்கள் புரிந்துகொள்ளள ஏதாவது விஷயங்கள் உண்டா? ஈரானில் குடும்ப உறவுகள் வலிமையானவை. அதோடு இணைந்த சொந்த பந்த உறவுகளும் அதேபோல்தான். இந்த வகையில் எனது அம்மாவின் குடும்ப உறவுகளில் அரசியலில் தீவிரமாக ஊக்கமாக ஈடுபட்டிருந்தனர். 1979ஆம் ஆண்டு புரட்சியில், எனது அம்மா குடும்பத்தினர் சிலரும், அப்பாவின் குடும்பத்தினர் சிலரும் சிறைப்பட்டனர். தூக்கிலும் போடப்பட்டனர். இந்த சம்பவங்கள்தான் எனது சிறுவயது நினைவுகளாக போராட்டத்தையும் எதிர்ப்பையும் நினைவூட்டி வருகின்றன.  ஈரானிய பெண்ணாக ஒருவரின் வாழ்க்கை எப்படி இருந்தது? எனது அம்மா, அரசு வற்புறுத்திய கருப்பு நிறு பர்காவை அணியவில்லை. வண்ண நிறங்களைக் கொண்ட உடைகளை அணிந்தார். ஆனால் அரசு தனது கருத்துகளை மதிப்புகளை மக்கள் மீது திணித்தது. மக்கள் கொண்டிருந்த கருத்துகளுக்கும் அரசுக்கும் பொருந்திப்போகவில்லை. தொன்மை பழக்க வழக்கங்களை உடைத்து சுதந்திரம் கேட்கும் போராட்டங்கள் இன்று வரை நடந்து வருகின்றன. பெண்கள்,

எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது! - ரோன் மால்கா, இஸ்ரேலிய தூதர், இந்தியா

படம்
            ரோன் மால்கா இஸ்ரேல் தூதர் , இந்தியா     இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது . இதனை எப்படி அறிந்தீர்கள் ? எங்களது அமைப்பு மிகவும் வேகமாக தகவல்களை அறியக்கூடியது . அதனால் குண்டுவெடிப்பு நடந்தவுடனே அதிகாரிகளிடமிருந்து எனக்கு தகவல் கிடைத்துவிட்டது . இப்படி நடந்திருப்பதால் நாங்கள் விழிப்புடனும் , அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு தயாராகவே இருக்கிறோம் . கடந்த சில நாட்களாகவே நாங்கள் பல்வேறு மிரட்டல்களை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறோம் . இந்த வெடிகுண்டு மூலம் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் யூகித்துவிட்டோம் . எனவே தேவையான முன்தயாரிப்பு நடவடிக்கைகளை எடுத்து விட்டோம் உங்களுக்கு வந்த மிரட்டல்களை பற்றி சொன்னீர்கள் . அதனை விரிவாக சொல்ல முடியுமா ? இவையெல்லாம் இஸ்ரேல் தொடர்புடையதுதான் . நாங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் . இதனால் ஈரான் அரசு , லெபனானின் ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளிடமிருந்து எங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன . நாங்கள் எங்கள் எதிரிகளை குறை்த்து மதிப்பிடவில்லை . நாங்கள் இவற்றை தீவிரமாகவே அண

இணையவழித் தாக்குதலை எதிர்பார்க்கும் அமெரிக்கா!

படம்
giphy அமெரிக்கா டக்கென முடிவெடுத்து இரான் படைத்தளபதியை ட்ரோன் மூலம் தீர்த்துக்கட்டியது. ஆனால் அமெரிக்காவின் மூர்க்கத்தனத்தினால் பெட்ரோல், டீசல் விலைகள் இந்தியாவில் கூடியுள்ளது. தனது தாக்குதலை நியாயப்படுத்து இந்தியாவையும் க்வாசிம் தாக்க நினைத்தார் என்று பேசினார். நேரடியான தாக்குதலோடு தற்போது இணையம் சார்ந்த தாக்குதலையும் ஈரான் மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கார்னெகி அமைதி நிறுவனம், மூன்றாம் உலகப்போர் என்பது நேரடியாக நடைபெறாது. அது இணையம் மூலமாகவே நடைபெறும் என்று கூறியுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு, மக்கள் ஈரானின் இணையத் தாக்குதல் விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ராணுவம், அரசு சார்ந்த வலைத்தளங்கள் மிகச்சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் பராமரிக்கப்பட்டு வருபவை. ஆனால் சாதாரண மக்களின் வங்கிக்கணக்கு, இணைய சேவை, தனிப்பட்ட உள்ளூர் அரசு சேவைத் தளங்கள் முடக்கப்பட வாய்ப்புள்ளது. உலகம் முழுக்க உள்ள ஈரானியர்கள், சௌதியர்கள், அமெரிக்கர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்கிறது எம்ஐடி நிறுவன செய்தி அறிக்கை. இதில் ஈரானி

ஈரானின் வெளிநாட்டு படைகளை வழிநடத்தியவர் க்வாசிம் சோலெய்மானி!

படம்
the print ஈரான் படைத்தலைவர் க்வாசிம் சோலெய்மானி, பாக்தாத் விமானநிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டு உள்ளார். கார் மீது கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் கார் முழுவதும் எரிந்துபோனது. சொக்கப்பனையாக எரிந்து உயிரை விட்ட இவரது இடத்தில் இவருக்கு அடுத்தபணி நிலையில் இருந்த இஸ்மாயில் கானி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானில் நாற்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடை அச்சுறுத்தல்களையும் தாங்கி நின்ற நம்பிக்கையான ஆளுமை இவர். சிரியாவில் அதிபர் பசார் ஆசாத்தின் பின்னே ஈரானின் படைகள் நின்றதால், அமெரிக்க படைகள் பெரும் உயிரிழப்பைச் சந்தித்து  வந்தன. 1980இல் ஈராக்குடன் நடந்த இஸ்லாமிய குடியரசு தொடர்பான போர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் க்வாசிம் சோலெய்மானி. 2003ஆம் ஆண்டு வரை க்வாசிம் யாருக்கும் தெரியாமல் தன் உத்தரவுகளை இட்டு ஏராளமான அமெரிக்கர்களை கொன்று கொண்டிருந்தனர். பின்னர்தான் அமெரிக்க உளவுப்படை, க்வாசிமை முக்கியமான தளபதி என அடையாளம் கண்டு அவரை கொல்வதற்கான முன்தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட்டது. அரசியலுக்கு பலரும் இவரை அழைத்தனர். ஆனால் தனக்கு ராணுவ விஷயங்களே போதும் என்று

உருளைக்கிழங்கே உணவு- பொருளாதார தாக்குதலில் ஈரான்!

படம்
pixabay ஈரானில் உணவு பரிதாபம்! வளமான, போர்களைச் சந்திக்காத நாடுகளில் உருளைக்கிழங்கு என்பதற்கு பொருள், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு பொரியல் மட்டுமே. ஆனால் வறுமை, சர்வாதிகாரம், பொருளாதாரத் தடை ஆகியவற்றைச் சந்திக்கும் நாடுகளுக்கு உருளைக்கிழங்குதான் உணவாதாரமே. எனவேதான் உடல்பருமனுக்கு உருளைக்கிழங்கு பெருமளவு இகழப்பட்டாலும், அதன் உற்பத்தியை குறைப்பதில்லை. காரணம், காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஈரான் தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக வெளிநாடுகளில் வாங்கி வந்த சோளம், அரிசி, பார்லி ஆகியவை அங்கு நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது அங்கு மக்களுக்கு உணவாதாரத்திற்கு உருளைக்கிழங்குதான் ஒரே வழி. 2009 ஆம் ஆண்டு பிரதமரான ஈரான் அதிபர் மஹ்மூத் ஆமடினேஜாட் ஆட்சியில் மக்கள் கடும் பிரச்னைகளைச் சந்தித்தனர். இதன் விளைவாக, அவர்களின் கடந்த காலத்தை நினைவூட்டும்படி, நமக்கு உருளைக்கிழங்கு வேண்டாம் என தேர்தல் பிரசாரத்தில் எதிர்கட்சி தலைவர்கள் அலறினர். ஏறத்தாழ உருளைக்கிழங்கு என்பதே அங்கு மறைந்து வந்த நேரத்தில் மீண்டும் அதனை மக்கள் நாட வேண்டிய சூழ

ஈரானை இயக்கும் புலனாய்வுத் தலைவர்!

படம்
ஈரானிலுள்ள அரசுக்கு விரோதமான அயல்நாட்டு உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்காவின் இதயத்துடிப்பை எகிற வைத்துள்ளார். கூறியது உளவுத்துறை தலைவரான சையத் முகமது ஆலவி. சுருக்கமாக ஆலவி. அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது முதல் பொருளாதார தடைகளை எதிர்த்து தில்லாக அயதுல்லா காமனேனி நிற்பதற்கு, ஆலவியின் பக்கத்துணையே காரணம்.  மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் செல்வாக்கு பெற்ற புரட்சி காவல்படையை வலுவாக்குவதில், அதனைப் பற்றிய பயத்தை பிறநாடுகளுக்குப் பரப்புவதிலும் கவனமாக இருப்பவர் அதிபர், ரூஹானிக்கும் நெருக்கமானவர். ஆலவி மட்டுமல்ல பிற அமைச்சர்களும் காம னேனியின் ஆணைகளைக் கேட்டு அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுகின்றனர் என்கிறார் அரசியல் வல்லுநர் ஒருவர். ஆலவி, டெலிகிராம் ஆப்பை பயன்படுத்தி புரட்சியாளரை கைது செய்தது, நாட்டின் நீதிபதி மகளை உளவுத்துறை மூலம் வெளிநாட்டு தொடர்புள்ளதாக என கண்காணித்தது ஆகியவை இவரைப் பற்றி ஈரான் முழுக்க பேச காரணமானது. கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது, இணையத்தில் இளைஞர்களை கண்காணிப்பது என அனைத்தையும் கவனமான செய்பவர், இப்பணிக்கு

அமெரிக்கா ஈரானைத் தாக்கப்போகிறதா?

படம்
அமெரிக்காவிற்கு நரியையும், ஈரானுக்கு முள்ளம்பன்றியையும் எடுத்துக்காட்டாக சொல்லி டஜன் கணக்கில் கட்டுரைகளை எழுதிவருகின்றனர்.  அண்மையில் அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியது. ஈரான் அமெரிக்காவில் புகுந்து பென்டகனில் இருந்த விமானத்தை சுடவில்லை. அவர்களது வான் எல்லையில் புகுந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து ஆவேசப்பட்ட 73 வயதான ட்ரம்ப், ஈரானின் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆணையை வெளியிட்டு உடனே திரும்ப பெற்றிருக்கிறார்.  எண்பது வயதான அயதுல்லா கோமெனி, ஈரானை 30 ஆண்டுகளாக ஆண்டு வருகிறார். அமெரிக்காவிற்கான எதிர்ப்பு என்பதை அவர் எங்குமே விட்டுக்கொடுத்ததில்லை. இன்று மக்களிடையே பேசும்போதும், அமெரிக்காவின் தோல்வி, அதற்கு எதிராக ஈரானின் நிலைப்பாடு என்ற வார்த்தைகள் நீக்கமற இடம்பெறுகின்றன. இதனைக் குறிப்பிடும் அரசியல் பார்வையாளர்கள் ஷேக்ஸ்பியர், அரிஸ்டாட்டில் போன்றவர்கள் நரியைப் போன்றவர்கள். கார்ல் மார்க்ஸ் முள்ளம்பன்றியைப் போன்றவர்கள். நரி பல்வேறு விஷயங்களை அறிந்ததுதான். முள்ளம்பன்றி தன்னைக் காத்துக்கொள்ளும் விஷயத்தை மட்டுமே அறிந்துள்ளது என்று கிரேக்க க

ஈராக் -2 போர் தொடக்கமா?

படம்
அமெரிக்கா - ஈரான் போரா, வணிகமா? அமெரிக்கா தொடர்ந்து எண்ணெய் வளத்திற்காக மத்தியகிழக்கு நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது ஈராக்குடன் நடந்த போரின் தொடக்க காலப்போக்கை நினைவுப்படுத்துவதாகவே ஈரானுடன் நடக்கும் வார்த்தை யுத்தங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்டகனில் ஈராக்கிலிருந்து ஆபத்தான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை டொனால்டு ரம்ஸ்ஃபீல்டு பத்திரிகையாளர்களிடம் வார்த்தை விளையாட்டு மூலம் தெரிவித்தார். இப்போது ஈரானுடனான அணு ஒப்பந்தம் கைவிடல் ஆகியவையும் ஈராக் -2 ரகத்தில் அமைந்துள்ளதாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கிரெய்க் தியல்மன் கூறுகிறார். இது பற்றி காங்கிரசில் விவாதிக்காமல் எப்படி அரசு முடிவெடுக்க முடியும என்று கேட்கும் இவரது கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு, ட்ரம்ப் உடனே மறுப்பு தெரிவித்தார். அது போலிச்செய்தி. அவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை நாங்கள் ஈராக்குக்கு அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். எங்களுக்கு அப்படியொரு திட்டம் இல்லை. அனுப்புவதாக இருந்தாலும் இன்னும் அதிக படையி