இடுகைகள்

குடும்ப வன்முறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்!

படம்
          181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்! இதன் செயல்பாட்டைப் பார்ப்போம். ஒருவர் உதவி தேடி 181 என்ற எண்ணுக்கு அழைத்தால், அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ அங்கு அழைப்பு திசைதிருப்பப்படும். இப்படியான மாவட்ட மையத்தை ஒன் ஸ்டாப் சென்டர் - ஓஎஸ்சி என்று அழைக்கிறார்கள். என்ன மாதிரியான பிரச்னை என்று கேட்டு, ஆள் உதவி தேவையெனில் குறிப்பிட்ட இடத்திற்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படி மீட்கப்படும் பெண்கள் உதவி மையத்தில் அல்லது மாநிலத்தில் உள்ள 33 பெண்கள் காப்பகத்தில் ஏதாவது ஒன்றில் சேர்க்கப்படுவார்கள். 181 என்ற எண்ணில் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகிறது. கூடுதலாக ஆலோசனை, சட்டரீதியான உதவி, ஆதரவு, கல்வி உதவிகள், காவல்துறையினரின் தலையீடு தேவையிருந்தால் அதையும் பெறுகிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னார்வ அமைப்புகளின் உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள். 2018ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 181 உதவி மையம் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமாக அழைப்புகளைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான திட்டங்கள் பற்றி அற...

விவாகரத்தான ஆசிரியையைக் காதலிக்கும் மாணவன்! - கிறிஸ்டி - மேத்யூ, மாளவிகா மோகனன்

படம்
  கிறிஸ்டி 2023 மலையாளம் கிறிஸ்டி இயக்கம் ஆல்வின் ஹென்றி திரைக்கதை – பென்யாமின், ஜிஆர் இந்துகோபன் மாணவன் தன் ட்யூசன் ஆசிரியையைக் காதலிக்கும் கதை. பூவார் எனும் கடற்கரை கிராமத்தில் நடக்கிறது. கதை, ராய் என்ற மாணவனின் பார்வையில் நடைபெறுகிறது. இதனால் அவனது பார்வையில்தான் ட்யூஷன் ஆசிரியையை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.   சுமாரான படிப்பு, அதிக நேரம் நண்பர்களுடன் விளையாட்டு, நடனம் ஆடுவது என சுற்றுவதுதான் ராயிற்கு விருப்பம். ஆனால் தேர்வில் வெல்ல கொஞ்சமேனும் படிக்கவேண்டுமே? ஜாலி, கேலி மட்டுமே போதாது அல்லலவா? எனவே, பெற்றோர் அவனுக்கு ட்யூஷன் சொல்லித்தர கிறிஸ்டி என்ற ஆசிரியையை ஏற்பாடு செய்கிறார்கள். ராய்க்கு முதலில் கிறிஸ்டி ஜோசப்புக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக தோன்றுகிறது. பிறகு மெல்ல அவள் சொல்வதைக் கேட்டு படிக்கிறான். பரீட்சையிலும் படித்து வெல்கிறான். அதேசமயம் கிறிஸ்டி சேச்சியுடன் அவன் பழக்கமும் தொடர்கிறது. அவன், அவள் தேர்வுக்குச் செல்ல, உறவினர் திருமணத்திற்கு செல்லவென பல்வேறு உதவிகளைச் செய்கிறான். அவள் சிரிப்பதை, நட்பாக பேசுவதை காதலென நினைத்துக்கொள்கிறான். கிறிஸ்டிக்கு மாலத்தீ...