இடுகைகள்

கடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடல்நீரில் தங்கம் உண்டா?

படம்
              அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கடல்நீரில் தங்கம் உண்டா? உலகிலுள்ள ஒவ்வொருவரும் கடல் நீரை அலசி ஆராய்ந்தால் நபர் ஒருவருக்கு நான்கு கி.கி. அளவுக்கு தங்கத்தை பெறமுடியும். கடல்நீர் சுழற்சி அடைகிறதா? வடதுருவம், தென்துருவம் ஆகிய இருமுனைகளிலும் உள்ள கடல்நீர் கடிகார சுழற்சி, அதற்கு எதிர்சுழற்சி எனுமாறு நீரோட்ட சுழற்சியைக் கொண்டுள்ளன. செங்குத்து, கிடைமட்டம் என இரு வேறுபட்ட அளவுகளில் கடல்நீரோட்டம் உலகமெங்கும் சென்று வருகிறது. கடல்நீரிலுள்ள வேதிப்பொருட்கள் என்னென்ன? குளோரைடு, சோடியம், சல்பேட், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பைகார்பனேட், புரோமைடு, ஸ்ட்ரான்டியம், போரோன், புளுரைடு ஆகிய வேதிப்பொருட்கள் கடல்நீரில் உள்ளன. கடலில் அலையடிக்க என்ன காரணம்? பூமிக்கு கீழே நடக்கும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, காற்று ஆகியவை காரணமாக கடலில் அலைகள் உருவாகுகின்றன. பூமியின் ஈர்ப்புவிசை, நீரின் அழுத்தம் அலைகளை தொடர்ச்சியாக உருவாகி வரச்செய்கின்றன. கடலின் ஆழம் என்ன? கடலின் தோராய ஆழம் நான்காயிரம் மீட்டர்கள்.  

புலியும், கொக்கும் இணைந்து ஐநூறு ஆண்டு தொன்மையான தீயசக்தியுடன் போரிட்டு வெல்லும் கதை!

படம்
      டைகர் அண்ட் கிரேன் சீன டிராமா ஒரு நகரம் இருக்கிறது. அந்த நகரில் கடல்நீர், திடீரென அதிகரித்து பாய்ந்து நகரை அழிக்கத் தொடங்குகிறது. அதற்கு பின்னால் தீய சக்தி உள்ளது. அதை நான்கு இளைஞர்கள் சேர்ந்து அழிப்பதுதான் கதை. இதில் அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் சதிகள், தந்திரங்கள், போரில் ஏற்படும் இழப்புகள், உள்நோக்கம், சுயநலம், பேராசை என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார்கள் மை ஜர்னி டு யூ தொடரில் நடித்த நாயகன்,  இதிலும் முன்னணி நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு இரட்டை வேடம். ஒன்று நல்லவன். இன்னொருவன் கெட்டவன். வெள்ளை, கருப்பு என இரண்டு உடையில் அதை வேறுபடுத்தி காட்ட முயன்றிருக்கிறார்கள்.   மொத்தம் நான்கு வீரர்கள்.இதில் ஒருவர் மட்டும் கிராமத்தில் இருந்து வருகிறார். மற்றவர்கள் அனைவரும் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள். ஒருவர் நகரின் ராணுவ கமாண்டர், இன்னொருவர் நாட்டின் இளவரசன், இறுதியாக உள்ள இளம்பெண், நகரைக் காக்கும் ராணுவப்படைத் தலைவரின் பிள்ளை. இதில் அனைவருக்கும் சக்திகள் உள்ளது. கிராமத்தில் இருந்து வரும் நாயகன் ஹூ சி, நகைச்சுவைக்கு பொறுப்பு. அவரும் செங்கல் மருத்த...

Rings of fire என்றால் என்ன? - தைவான் நிலநடுக்கம்!

படம்
  தைவான் நிலநடுக்கம் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி, தைவானில் நடந்த நிலநடுக்கம் இருபத்தைந்து ஆண்டு வரலாற்றில் தீவிரமானது. அமெரிக்க வல்லுநர்கள் கணிப்பில் 7.4 ரிக்டர் அளவில் இருந்தது. இந்த இயற்கை பேரிடரில் எண்ணூறு பேர் காயமுற்றனர். ஒன்பது பேர் பலியானார்கள்.  நிலநடுக்கத்தின் தொடக்கம், தைவானின் கிழக்குப்பகுதி. அங்கே உள்ள ஹூவாலியன் கவுண்டி பகுதியில் உருவாகி வந்தது. இங்கு, பல்வேறு நிலநடுக்க அதிர்ச்சிகள் பதிவானது. அதில் ஒன்று, 6.5 ரிக்டர் அளவும் ஒன்று. உலகிலுள்ள நாடுகளில் தொண்ணூறு சதவீத நிலநடுக்க பாதிப்பு நடக்கும் நாடு, தைவான். இப்படியான நிலநடுக்க சூழல் கொண்ட நாட்டை ரிங் ஆஃப் ஃபயர் என்று குறிப்பிடுகிறார்கள். 1980ஆம் ஆண்டு தொடங்கி தைவானில் 4 ரிக்டர் அளவு அல்லது அதற்கு மேல் என நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.  எண்ணிக்கையில் இரண்டாயிரத்திற்கும் மேல் வருகிறது. நூறு நிலநடுக்கங்களின் ரிக்டர் அளவு 5.5 என அமெரிக்க நிலநடுக்க ஆய்வு அறிக்கை கூறுகிறது.  பசிஃபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலை, நிலநடுக்கப்பகுதிகளை ரிங் ஆஃப் ஃபயர் என்று குறிப்பிடுகிறார்கள். 40,240 கி.மீ. தொலைவில் அரைவட்ட அளவில் ...

அதீத நிலையை எட்டும் காலநிலை மாற்ற விளைவுகள்

படம்
  காலநிலை மாற்றம் குடிநீர் பற்றாக்குறை, காட்டுத்தீ, கடல் மட்டம் உயர்வு, மழை வெள்ளம் சமயத்தில் மட்டும் நாளிதழ்கள் பத்திரிகைகள் உறக்கத்திலிருந்து எழுந்து செய்திகளை வெளியிடுவார்கள். மற்ற நேரங்களில் கோவிலுக்கு செல்ல பிரதமர் செய்த விரதம் என சொம்படிக்கும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள். இதற்கு, சில ஆங்கில தேசிய நாளிதழ்கள் விதிவிலக்காக உள்ளன. அவர்களை பெரிதாக குறை சொல்ல ஏதுமில்லை. வாங்கிய பணம் அப்படி பேச, எழுத வைக்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுடைய வேலையைப் பார்க்கட்டும். நாம், காலநிலை மாற்றம் பற்றிய விஷயத்தைப் பார்ப்போம்.  1850ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உலகளவில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதற்கு இயற்கை ஒரு காரணம் என்றாலும், மனித செயல்பாடுகள் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.   வெப்பம் அதிகரித்து வருவதால் வெப்ப அலை, பஞ்சம், வெள்ளம், புயல், காட்டுத்தீ சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துவருகின்றன. காலநிலை மாற்றத்தில் எல் நினோ, லா நினோ ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் பற்றி அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், ராயல் சங்கம் ஆகிய இரு அமைப்புகள் கிளைமேட் சேஞ்ச...

தெரிஞ்சுக்கோ - திமிங்கலம்

படம்
  தெரிஞ்சுக்கோ – திமிங்கலம் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை, சமகாலத்தில் திமிங்கலம் என குறிப்பிடுகிறார்கள்.பெருசு, சீயான், பெரிய தலைக்கட்டு என்ற வரிசையில் திமிங்கலமும் சேர்கிறது. உண்மையில் கடல் உயிரினமான திமிங்கலத்திற்கு அப்படி என்ன சிறப்பு உள்ளது என பார்ப்போம். பவ்ஹெட் திமிங்கலத்தின் வாய் 2.4 மீட்டர் நீளமானது. அதாவது, மூன்று வயது வந்த மனிதர்களின் வாய்களின் அளவுக்கு பெரியது. ஹம்பேக் திமிங்கலத்தின் எடை 36 டன்னுக்கும் அதிகம். ஸ்பெர்ம் திமிங்கலம் வேட்டையாட செல்லும்போது கடலுக்குள் 3 கி.மீ. தூரம் பயணிக்கிறது. நீலத்திமிங்கலம் 30 மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது. நீலத்திமிங்கலத்தின் இதயத்தின் எடை 200 கிலோவுக்கு அதிகம். விலங்குகளில் அதிக எடை கொண்ட இதயம் இதுவே. ஸ்பெர்ம் திமிங்கலத்தின் மூளை 7.8 கி.கி எடை கொண்டது. விலங்குகளில் அதிக எடை கொண்ட மூளை இதுவே. பவ்ஹெட் திமிங்கலம், இருநூறு ஆண்டுகள் வாழ்கிறது. நீலத்திமிங்கலத்தின் எடை 150 டன்னுக்கும் அதிகம். அதாவது 32 ஆசிய யானைகளின் எடைக்கு நிகரானது. ஹம்பேக் திமிங்கலம் பாட ஆரம்பித்தால், பாடல் 35 நிமிடங்களுக்கு நீள்கிறது. இந்த திமிங்கலங்கள், ...

கடலில் ஏற்படும் அபாய மாற்றங்களால் உலக நாடுகள் மூழ்கும் அபாயம்!

படம்
    நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் ஏராளமான பாதிப்புகளை அடைந்து வருகிறது. கடல் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணங்கள், சூரிய வெப்பம், மேகங்கள், நீர் ஆவியாகும் செயல்முறை, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை கடத்தி பிறகு பூமிக்கு கடத்துவது ஆகியவையாகும். மேற்சொன்ன காரணங்கள் மூலம் வெப்ப அலை உருவாகி கடல் மட்டம் மெல்ல உயர்கிறது. கடலிலுள்ள பவளப்பாறைகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. மீன்கள் வெப்பம் காரணமாக துருவப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளன. கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகளவு உள்ளிழுக்கப்பட்டால், அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் கடல் உயிரினங்கள் அழியத் தொடங்குகின்றன. கடல்மட்டம் உயர்வதால் மாலத்தீவுகள் (இந்தியப் பெருங்கடல்), கிரிபதி (பசிஃபிக் கடல்) ஆகிய தீவுகள் மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளன. 2100க்குள் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தால் தீவுகளில் உள்ள கடற்கரையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் ஈர்த்துக்கொள்கிறது. இதன் விளைவாக, கடலின் பிஹெச் அளவு மாறி, அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதன் காரணமாக சில க...

கரிம எரிபொருட்களால் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவு!

படம்
  கார்பன் டை ஆக்சைடு வெளியீடு/ காலநிலை மாற்றம் கரிம எரிபொருட்களை எரிப்பதுதான் கார்பன் டை ஆக்சைடு உலகில் அதிகளவு பரவுவதற்கு காரணமாக உள்ளது. நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை மின்சாரம் உற்பத்தி செய்ய ஆதாரமான பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் சமைக்கவும், கதகதப்பு ஊட்டவும் கூட பயன்பாட்டில் உள்ளது. தொழில்துறை வளர்ச்சி தொடங்கிய காலம் முதற்கொண்டு, நிலக்கரி மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இன்று வரையும் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், அதன் விலை ஒப்பீட்டளவில் பிற பொருட்களை விட குறைவு. மலிவு. இதனால்தான், சூழல் மாநாட்டில் கார்பன் இலக்குகளை தூரமாக தள்ளிவைத்துக்கொண்டே நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு உள்ளது. இவற்றை பெரும்பாலும் சரக்குப் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். 2015ஆம் ஆண்டு, உலகில் வெளியான கார்பன் டை ஆக்சைடு அளவு 85.5 சதவீதம். இதற்கு, கரிம எரிபொருட்களே முக்கியமான காரணம். கச்சா எண்ணெய்யை அகழ்ந்தெடுத்து அதை தூய்மை செய்து பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய், தார் , பிளாஸ்டிக், கனிம எண்ணெய் என பல்வேறு வகையாக பிரித்து பயன்ப...

ஒரே சமயத்தில் சங்கிலித் தொடராக நடைபெறும் சூழல் பிரச்னைகள்!

படம்
இந்தியாவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் 21 விமானங்கள் எப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது, அப்படியான சூழலில் விமானியை குறை சொல்லி அரசு தப்பிக்குமோ சூழல் பிரச்னையும் இதேபோலத்தான் நேருகிறது. ஏழை மக்களின் உணவு உண்ணும் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் செய்யும் பித்தலாட்டங்களை மறந்துவிடுகிறார்கள். எல்லாம் வாங்கும் இனாமிற்கான விசுவாசம் வேறொன்றுமில்லை.  கடலில் வெப்பநிலை உயரத் தொடங்கினால், உடனே பவளப் பாறைகள் அழியத் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் பவளப்பாறைகள் அழியும் அளவு கூடி வருவதால் விரைவில் அதன் பாதிப்பை உணரத் தொடங்குவோம் என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூழல் பாதிப்பிற்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவேண்டுமென சில பத்திரிகைகள் எழுதி வருவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். பல நாடுகள் நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என சூளுரைத்து பேசுகின்றன. காசுக்கு மண்டியிடும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களின் பேச்சை குழப்பமின்றி வெளியிட்டு விசுவாசம் காட்டுகின்றன. முன்னேறியபிறகு மனிதர்கள் பூமியில் உயிர்வாழ இருப்பார்களா என்பதே சூழல் போராட...

காற்றில் உள்ள வேதிப்பொருட்கள்!

படம்
காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் என்ன இருக்கிறது என நினைப்போம். அதில் கார்பன் டை ஆக்சைடு எனும் முக்கியமான பசுமை இல்ல வாயு உள்ளது. இதன் காரணமாகத்தான் பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. நாம் ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். கார்பன் டை ஆக்சைடை முழுக்க எதிர்மறையாகவே பார்க்கவேண்டுமென்பதில்லை. அதுவும் உயிரினங்களுக்கு உதவுகிற ஒன்றுதான். ஆனால் அதன் அளவு அபரிமிதமாக அதிகரிக்கும்போது பிரச்னைகள் தொடங்குகின்றன. வளிமண்டலத்திற்ள் ஒருமுறை கார்பன் டை ஆக்சைடு வந்துவிட்டால் முழுமையாக மறைந்துபோக நூறாண்டுகள் தேவை. காற்றில் நீர், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை சூழலை பாதிக்கும் தீவிரம் கொண்டவை. வெப்பமோ வெப்பம் வெப்பம் அதிகமாகிக்கொண்டே செல்லும் காலநிலையை எல்நினோ அறிகுறி என்கிறார்கள். இது வெப்பமான சூழ்நிலையைக் குறிக்கிறது. எரிமலை வெடிப்பு நடக்கும் சூழலை, குளிர்ச்சியான ஆண்டுகள் என குறிக்கிறார்கள். 2020ஆம் ஆண்டு உலகளவில் வெப்பநிலை 1.2 டிகிரி செல்...

கடலைப் பாதுகாப்பதை வெறும் பேச்சாக அன்றி, செயலாக மாற்ற வேண்டும்! - பேட்ரிசியா ஸ்காட்லாந்து

படம்
  பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர் காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து. கடலை பாதுகாக்கும் செயல்பாட்டினை ஜி20 மாநாட்டை நடத்தும் இந்தியா முன்னெடுக்கும் என நம்புகிறார். நீலப்பொருளாதாரம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? உலக நாடுகள் வரையறுத்துள்ள நீலப்பொருளாதாரம் என்பதையே நானும் கூறுகிறேன். கடலை சூழலுக்கு உகந்த வழியில் பயன்படுத்தும்போது, அதைச் சார்ந்த   மக்களின் வாழ்க்கையும் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும். நாம் ஏற்கெனவே நிலத்தை பெருமளவு பயன்படுத்திவிட்டோம். எனவே, இப்போது கடலில் இருக்கும் இயற்கை வளங்களை கவனத்துடன் பயன்படுத்தவேண்டும். நாம் நிலத்தை மோசமாக பயன்படுத்தியது போல கடலை, அதன் வளத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை மனதில் கொள்ளவேண்டும். நீலப்பொருளாதாரத்தில் உள்ள ஆபத்துகள் என்ன? இப்படி ஏற்படும் ஆபத்துகள் நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவையா? கடலை தங்களது வாழ்வாதாரமாக, பொருளாதார அடிப்படையாக கொண்டுள்ள நாடுகளைப் பொறுத்து இதன் பாதிப்புகள் மாறுபடும். காலநிலை மாற்றம், கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரி...

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பவளப்பாறைகளைக் காக்கலாம்!

படம்
  பவளப்பாறைகளைக் காக்கும் முயற்சி!  மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, பெலிஸ். இங்கு கடல்பரப்பில் உள்ள பவளப்பாறைகள் சூழல் அமைப்பில் முக்கியமானவை. சூழலியலாளர் லிசா கார்ன், கடலில் பவளப் பாறைகளை ஆய்வு செய்து வருகிறார். இவர், காலநிலை மாற்றத்தில் அவை அழிந்துவருவதைக் கண்டார். இதைத் தடுக்க, 2013ஆம் ஆண்டு ஃபிராக்மென்டேஷன் ஆஃப் ஹோப் எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம், அழிந்த பவளப்பாறைகளை மீட்கும் செயல்பாடுகளை செய்து வருகிறார்.  லிசாவின் வீடருகே லாஃபிங் பேர்ட் கயே (Laughing Bird Caye) எனும் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள கடல்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை மீண்டும் வளர்க்க முயன்றுவருகிறார் லிசா. அறிவியலாளர்களின் ஆராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி, பவளப்பாறைத்துண்டுகளை வளர்த்து வருகிறார். சிமெண்டில் செய்த அடித்தட்டு கற்களில் பவளப்பாறைகளிலிருந்து சேகரித்த பகுதிகளை பொருத்தி வளர்க்கிறார்.  அழிந்துவரும் எல்க்ஹார்ன், பவளப்பாறைகளின் மரபணுக்களை சேகரித்து 28 மரபணு வங்கி  நர்சரிகளை உருவாக்கியுள்ளார்.  அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த கடல் உயிரினங்கள் ஆராய்ச்சிய...

அன்டார்டிகாவின் வெடால் கடலில் வாழும் மீன்கள்!

படம்
  லட்சக்கணக்கான   மீன்கள் வாழும் காலனி! அன்டார்டிகாவில் வெடால் கடல் அமைந்துள்ளது. இங்கு, 500 மீட்டருக்கு கீழே தான் ஏராளமான மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. 240 சதுர கி.மீ. தொலைவில் லட்சக்கணக்கான மீன்களின் வளை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஆய்வறிக்கை கரன்ட் பயாலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலில் வாழும் ஐஸ் மீன்கள் இங்குள்ள சூழலுக்கு எந்த விதத்தில் பயனளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் இதுவரை ஆராய்ச்சி செய்யவில்லை.  ஜெர்மனியைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வாளர் ஆடுன் பர்சர், ஐஸ் மீன்களைப் பற்றிய தகவல்களை கண்டறிந்தார். இவர் ஜெர்மனியின் ஆல்ஃபிரட் வெக்னர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஐஸ்கட்டிகளை துளைத்துச் செல்லும் வாகனத்துடன் சென்றவர், ஆராய்ச்சியை பதிவு செய்துள்ளார். கடல் படுகையை ஒலி மூலம் வரைபடமாக்கியுள்ளார்.  ஆய்வாளர்கள், நீருக்குள் சென்று ஆய்வு செய்தபோது, வட்டவடிவிலான வளையைக் கண்டனர். அங்கு, சிறுகற்களை அடுக்கி அதில் ஐஸ்ஃபிஷ் தனது முட்டைகளை இட்டிருந்தது. இந்த மீன் இனம், அன்டார்டிகாவில் மட்டுமே காணப்படுகிறது. இங்குள்ள கடுமையான குளிரையும் சமாளி...

இந்திய கடல் ஆமைகள்!

படம்
  இந்திய கடல் ஆமைகள்! தோணியாமை  (Leatherback turtle) அறிவியல் பெயர்: டெர்மோசிலிஸ் கோரியாசியா (Dermochelys coriacea) நீளம்: 170 செ.மீ  எடை: 500 கி.கி உணவு : ஜெல்லி மீன் வாழுமிடம் : அந்தமான் நிக்கோபார் தீவுகள் தெரியுமா?:  கடல் ஆமைகளில் மிகப்பெரியது தோணியாமை இனம்தான்.  சித்தாமை அல்லது பங்குனி ஆமை (Olive ridley turtle) அறிவியல் பெயர் லெபிடோசெல்ஸ் ஆலிவாசியா (Lepidochelys olivacea) நீளம்:  62-70 செ.மீ. எடை:  45 கி.கி உணவு: இறால், நண்டு, சிப்பி, ட்யூனிகேட், பிற மீன்கள் வாழிடம்: இந்திய கடல்பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் தெரியுமா? மெக்ஸிகோ, இந்தியா, நிகரகுவா, கோஸ்டா ரிகா நாட்டு கடற்புரங்களில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பேராமை (Green Turtle) அறிவியல் பெயர்: செலோனியா மைடாஸ் (Chelonia mydas) நீளம்: 120 செ.மீ. எடை: 159 கி.கி. உணவு: கடல் புற்கள், பாசி, ஜெல்லி மீன் வாழிடம்: லட்சத்தீவுகள் தெரியுமா? பச்சை ஆமை, பிற ஆமைகளைப் போலன்றி தாவரங்களை முதன்மையாக உண்டு (Herbivorous) வாழ்கிற உயிரினம் அழுங்கு ஆமை (Hawksbill turtle) அறிவியல் பெயர் எர...

நீலப்பொருளாதாரம் மக்களுக்கு முக்கியமானது! கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க்

படம்
  நேர்காணல் கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க் கடல் உயிரியலாளர் பிளானட்டோ ஓசனோ என்ற குழுவில் என்ன விஷயங்களை  முக்கியத்துவப் படுத்துகிறீர்கள்?  எங்கள் குழுவினர் கடல் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு, பிரசாரம், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உதவி வருகிறோம். இதில் குழந்தைகள், ஆசிரியர்கள், மீனவர்கள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் என அனைவருமே உள்ளடங்குவர். இவர்களை வைத்து கடல் சார் ஆராய்ச்சி, கல்வி, நிலைத்த மேம்பாடு ஆகியவற்றை அடைய முயல்கிறோம்.  மீனவர்கள், கடல் உயிரினப் பாதுகாப்பிற்கு எதிரியாயிற்றே?  அவர்களோடு எப்படி பணிபுரிகிறீர்கள்? மண்டா ரே, ஆமைகள் ஆகியவற்றை நாங்கள் மீனவர்களுடன் சேர்ந்து பாதுகாக்க முயல்கிறோம். மீனவர்களுக்கு நாங்கள் இதுபற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளோம். அவர்களது வலையில் மண்டா ரே மீன், ஆமைகள் சிக்கினால் எங்களுக்கு தகவல் கொடுப்பார்கள். நாங்கள் அந்த உயிரினங்கள் பற்றிய தகவல்களை மீனவர்களிடம் இருந்து தான் பெறுகிறோம்.  நீல பொருளாதாரம் என்று கூறுகிறீர்களே? அதை விளக்கி கூறுங்களேன். மீன்வளம், சுற்றுலா, கடல்மேம்பாடு, துறைமுகம் என நிறைய ...

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்குமான நுழைவாயில்!

படம்
  ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நுழைவாயில்!  அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.  மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது.  3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன.  ”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியமாக ...

தொன்மை வரைபடங்கள் எப்படி உருவாகி வளர்ச்சி பெற்றன?

படம்
  தொன்மை வரைபடங்களின் வரலாறு! இன்று கூகுள் நிறுவனத்தின் மேப் சேவையைப் பயன்படுத்தாதவர்கள் குறைவு. இணைய வசதி இருந்தால், இச்சேவையை உலகின் எந்த இடத்திலும் பயன்படுத்தலாம. காணவேண்டிய இடங்களை அடையாளம் கண்டறிய முடியும். இன்று எப்படி சாலையோரம் உள்ள வரைபட பலகை அல்லது ஸ்மார்ட்போனில் உள்ள வரைபடங்களைப் பார்த்து இடங்களைக் கண்டறிகிறோம்.தொன்மைக்காலத்தில் இடங்களைக் கண்டறிய வரைபடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.   தொன்மைக்காலத்தில், பிரான்சின் லஸ்காக்ஸிலுள்ள குகையில் வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன. இதன் காலம் 16,500 ஆண்டுகள் என அகழ்வராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதில், எருதுகளும், பறவைகளும் குறியீடாக இடம்பெற்றுள்ளன. இவை வரைபடத்தில் நட்சத்திரங்களாக அறியப்படுகின்றன.   இதைப்போலவே தற்போது  பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படும் தொன்மையான  வரைபடம் ஒன்றுள்ளது.  கி.மு.6 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என மதிப்பிடப்படும்  இந்த  வரைபடத்திற்கு, பாபிலோனியன் மேப் ஆஃப் தி வேர்ல்ட் (Babylonian map of the world)  என்று பெயர். 13 செ.மீ. நீளத்தில் கொண்ட களிமண்...

சறுக்கி கீழே விழும் அட்லாண்டிக் பஃபின் - கோமாளிப்பறவை

படம்
  கோமாளிப்பறவை அட்லாண்டிக் பஃபின்ஸ்களை, கடல் கோமாளிகள் என  கூறுகிறார்கள். இதற்கு காரணம், இதன் செயல்பாடுகள்தான். மலை உச்சியில் இருந்து கீழே விழுவது போல பறக்கும் இயல்புடையது. நிமிடத்திற்கு இறக்கைகளை 300 முறை அசைக்கிறது. மீன்களை வேட்டையாடினால் ஒரு டஜன் மீன்களை அலகில் பிடித்து வைத்து உண்ணும். இதன் ஆரஞ்சு நிற வளைந்த அலகு மீன்கள் கீழே விழாமல் தடுக்கிறது.  வெள்ளை முகம், ஆரஞ்சுநிற அலகு, கண்களைச்சுற்றியுள்ள கருப்பு வண்ணம் ஆகியவையே கோமாளித் தோற்றத்திற்கு காரணம்.  பஃபின்களின் ஆரஞ்சு நிறம் அதன் ஆரோக்கியத்தை குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆரஞ்சு நிறம் கோடைக்காலத்தில் இணைசேரும்போதுதான் உருவாகிறது. இப்படி ஆரஞ்சு நிறத்தை உருவாக்க, பஃபின் பறவை அதிக ஆற்றலை செலவழிக்கிறது. இணைசேரும் காலம் முடிந்தவுடன் ஆரஞ்சுநிறம் மங்கி, பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. டஃப்டட் பஃபின் (Tufted puffin), ரினோசெரஸ் ஆக்லெட் பஃபின் (Rhinoceros auklet puffin) ஆகிய பறவை இனங்களில் புருவங்கள் நீளமாக இருப்பது, நீர்யானை போன்ற முகத்தோற்றம் ஆகியவை உண்டு. இதெல்லாம் இணை சேர்வதற்கான காலத்திற்கான ஈர்ப்பிற்க...

கடலின் தனித்துவம் அறிவோம்!

படம்
  கடலின் தனித்துவம்! கடலில் சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி உலக பொருளாதார கூட்டமைப்பு, தி ஓசன் எகானமி  2030 என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில அம்சங்கள் இதோ.. நிலப்பரப்பை விட கடற்பரப்பு பெரியது. சூழல் அமைப்பும், உயிரினங்களும் வேறுபட்டவை. கடல் பரப்பில் உள்ள எல்லைகளும் நாடுகளுக்கு நாடு மாறுபடும்.  கடலில் உள்ள நீரில்,  ஒளிபுகும் தன்மை குறைவாகவே இருக்கும். கடல்படுகைகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதும் பல்வேறு சவால்களைக் கொண்டது.  கடல் பரப்பில் சூழல் பாதுகாப்பு திட்டங்களை திட்டமிடுவது, அதனை வரைபடமாக்குவது, மேலாண்மை செய்வது கடினம்.  கடல் நீரில் மாசுபாடு எளிதாக பிற இடங்களுக்கு பரவும். வேறு இனங்களைச் சேர்ந்த தாவர இனங்கள் இதன் வழியாக எளிதாக பரவ வாய்ப்புள்ளது.  கடல்வாழ் உயிரினங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பு சவால்களைக் கொண்டது.  சட்டவிரோதமான செயல்பாடுகளை தடுப்பது கடினம். கடல் பரப்புக்கு உரிமை, பொறுப்பு என வரையறுப்பது சிக்கலானது.  புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வந்தால், மனிதர்கள் கடலில் வாழ்வது சாத்தியமாகலாம்.  ...

மீன் பிடிப்பதைத் தடை செய்தால் என்னாகும்?

படம்
  மீன் பிடிப்பதை தடை செய்தால்... உலகம் முழுக்க  உள்ள மக்கள் மீன்களை அதிகளவு உண்டு வருகிறார்கள். இதற்காக, கடலில் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் மாசுபாடும் கூடுகிறது. 1961 முதல் 2016 வரை செய்யப்பட்ட ஆய்வில் இறைச்சியை விட மீன்களை அதிகளவு உணவாக மக்கள் எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. உலக நாடுகளிலுள்ள அரசுகள் மீன்பிடிப்பதை தடை செய்தால் என்னாகும்? உணவுத்தேவை உலகம் முழுக்க 40 கோடிக்கும் அதிகமான மக்கள்  மீன்பிடித்தொழில் இருக்கிறார்கள்.அரசின் தடையால், இவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.  ”சிறியளவில் மீன்களை பிடித்து விற்கும் மீனவர்களைப் பற்றிய ஆவணங்கள் கிடைப்பதில்லை” என்றார் சூழலியலாளர் ஸ்டீவன் பர்செல். தெற்காசியா, இந்தியா, மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் உள்ள மக்கள் புரத தேவைக்கு அதிகமும் மீன்களையே சார்ந்துள்ளனர்.  ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகளவு மக்கள் புரத தேவைக்கு இறைச்சியை சார்ந்துள்ளனர். நிலத்தில் குறைந்தளவு விவசாயம் செய்யும் நாடுகளில் மீன்பிடி தடை என்பது உணவுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். மீன் பிடிப்பதை முழுமையாக தடை செய...

பவளப்பாறை, பருவ மழைக்காடு பற்றி அறிவோம்!

படம்
  தெரியுமா? பவளப்பாறை கடலின் ஆழ்கடலில் உள்ள முக்கியமான சூழல் அமைப்பு. ’கடலில் அமைந்துள்ள மழைக்காடுகள் ’என சூழலியலாளர்கள் இதனைக் கூறுகிறார்கள். பவளப்பாறைகளைப் பார்க்க பாறைகள் போல தோற்றமளிக்கும். ஆனால் அவை உண்மையில் விலங்குதான். இதன் மேல்பகுதி கால்சியம் கார்பனேட் வேதிப்பொருளால் ஆனது. இதுவே அதன் ஓடுபோல தோற்றமளிக்கிறது.  இதன் அடிப்பரப்பில் நண்டு, ஆமை, மீன் என ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறை, எளிதில் அழியக்கூடியவை. கடலில் ஏற்படும் மாசுபாடு இதனை எளிதாக பாதித்து அழிவை உருவாக்குகிறது.  பருவ மழைக்காடு இங்கு, வெப்பமும், ஈரப்பதமும் சரிபாதி அளவில் இருப்பதால், தாவரங்களும்  உயிரினங்களும் அதிகளவில் இங்கு வாழ்கின்றன.  உலகில் வாழும் தாவரம் மற்றும் விலங்கு இனங்களில்  பாதியளவு பருவ மழைக்காடுகளில் காணப்படுகின்றன.  தாவரம், விலங்கு, பூஞ்சை, நுண்ணுயிரிகள் என பல்லுயிர்த்தன்மை கொண்ட இடம் இது. மத்திய தெற்கு அமெரிக்கா, மேற்கு மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா தீவு ஆகியவற்றில் பருவ மழைக்காடுகள் அமைந்துள்ளன.  ...