கடலின் தனித்துவம் அறிவோம்!

 











கடலின் தனித்துவம்!

கடலில் சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி உலக பொருளாதார கூட்டமைப்பு, தி ஓசன் எகானமி  2030 என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில அம்சங்கள் இதோ..

நிலப்பரப்பை விட கடற்பரப்பு பெரியது. சூழல் அமைப்பும், உயிரினங்களும் வேறுபட்டவை. கடல் பரப்பில் உள்ள எல்லைகளும் நாடுகளுக்கு நாடு மாறுபடும். 

கடலில் உள்ள நீரில்,  ஒளிபுகும் தன்மை குறைவாகவே இருக்கும். கடல்படுகைகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதும் பல்வேறு சவால்களைக் கொண்டது. 

கடல் பரப்பில் சூழல் பாதுகாப்பு திட்டங்களை திட்டமிடுவது, அதனை வரைபடமாக்குவது, மேலாண்மை செய்வது கடினம். 

கடல் நீரில் மாசுபாடு எளிதாக பிற இடங்களுக்கு பரவும். வேறு இனங்களைச் சேர்ந்த தாவர இனங்கள் இதன் வழியாக எளிதாக பரவ வாய்ப்புள்ளது. 

கடல்வாழ் உயிரினங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பு சவால்களைக் கொண்டது. 

சட்டவிரோதமான செயல்பாடுகளை தடுப்பது கடினம். கடல் பரப்புக்கு உரிமை, பொறுப்பு என வரையறுப்பது சிக்கலானது. 

புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வந்தால், மனிதர்கள் கடலில் வாழ்வது சாத்தியமாகலாம். 


New scientist 

23 apr 2022

Image - surfertoday


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்