கிரிஸ்பிஆர் முறையை வணிகப்படுத்த முடியும் - ஜெனிஃபர் டவுட்னா

 












அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளர், ஜெனிஃபர் டவுட்னா. 2020ஆம் ஆண்டு மரபணு செம்மைப்படுத்தல் மேம்பாட்டிற்காக (Genome Editing) இம்மானுவேல் சார்பென்டியருடன்  சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்.   

வால்ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த சிக்ஸ்த் ஸ்ட்ரீட் என்ற நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்பணியை நீங்கள் ஏற்றது ஏன்?

சிக்ஸ்த் ஸ்ட்ரீட் நிறுவனத்தில், சரியான குழுவை அடையாளம் கண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த நிறுவனத்தின் எந்திரக் கற்றல் நுட்பம் மூலம் கிரிஸ்பிஆர் தகவல்களை ஆராய முடியும். எந்திரக்கற்றலும், கிரிஸ்பிஆர் முறையும் ஒன்றாக சேரும்போது ஆற்றல் கொண்டதாக மாறும். இதன் மூலம் மரபணு நோய்களை அறிந்து சிகிச்சை செய்யலாம். 

பெண்களின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 2.3 சதவீத அளவுக்கு முதலீடு (Harvard Business Review)  கிடைப்பது பற்றி தங்களது கருத்து? 

இந்த ஆய்வுத்தகவல் எனக்கு ஏமாற்றம் தந்தது. நான் ஆய்வுத்துறையில் பல்லாண்டு காலமாக  இருப்பதால் அதிர்ச்சி ஏற்படவில்லை. 

 கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்த முடியுமா?

10 ஆண்டுகளுக்கு மேலாக கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்த ஏராளமான நிறுவனங்கள் உழைத்து வருகின்றன. மருத்துவ ரீதியான சோதனைகள் ஒருபுறமும், வேளாண்மையில் பஞ்சத்தை தாங்கும் நெல் ரகங்களை உருவாக்கும் முயற்சிகளும் கலிஃபோர்னியா நகரில் நடந்து வருகின்றன. 


MIT Technology Review


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்