இடுகைகள்

சாட்ஜிபிடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல், அரசியலில் தலையிடாமல் தள்ளி நிற்க முயலும் டெக் நிறுவனங்கள்!

படம்
  கீழ்த்தரமாக பேசுவது அரசியலில் இயல்பாக இருக்கிறது. அதை இன்னும் புதிய உயரங்களுக்கு காவிக்கட்சி ஆட்கள் கொண்டு சென்று வருகிறார்கள். எதிராளி பேசும் விதமாக அதற்கு நிகராக அதை விட கீழ்த்தரமாக பேச நிறைய ஆட்கள் தயாராகி வருகிறார்கள். தனிநபர்கள் பேசுவது வேறு. அதையே டெக் நிறுவனங்கள், இணையத்தில் பதிலாக அளிப்பது வேறு. குறிப்பிட்ட கட்சி சார்ந்து தவறான பதில்களை அல்லது அவர்களுக்கு பிடிக்காதது போல நேர்மையாக பதில் சொன்னால் கூட தொழில் செய்யமுடியாது.  இந்த விதிகளை யாரும் மீறமுடியாது. மீறினால் உடனே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேசியபாதுகாப்பு, உளவுத்துறை என பல்வேறு அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கு, அலுவலகங்களுக்கு வந்து சோதனையிடுவார்கள். பிறகு தேர்தல் பத்திரங்களில் காசு கொடுத்தால் மட்டுமே தொழில் பிழைக்கும். இல்லையெனில் லஞ்ச, ஊழல் வழக்கு பதிவாகும். தேசதுரோகி என பிழைப்புவாத ஊடகங்கள் அலறுவார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. இப்படி மிரட்டி பணம் பிடுங்குவதில் காவிக்கட்சி அதிகாரத்தில் இருப்பதால் கெட்டிக்காரத்தனம் காட்டுகிறது.  கூகுள், அரசியல் கருத்துகளைக் கூறுவது தொடர்பான பிரச்னையில், எந்த கருத்தும் கூறுவ

செயற்கை நுண்ணறிவு மூலம் பணம் சம்பாதிக்கும் ஏழை மக்கள்! - கார்யா ஆப்பின் வறுமை ஒழிப்பு செயல்பாடு

படம்
  கார்யா ஆப் பயன்பாட்டாளர்கள், கர்நாடகா செயற்கை நுண்ணறிவு மூலம் வேலையிழப்பு பற்றிய பதற்றம் தரும் செய்திகளை தினந்தோறும் கேட்டு வருகிறோம். கர்நாடக மாநிலத்தின் சிலுகாவடி, ஆலஹல்லி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நிரந்தரமான வேலை என்று கூறமுடியாது. ஆனால், அங்குள்ள விவசாய நிலத்தில் செய்யும் கூலி வேலைக்கான ஊதியத்தை விட அதிகம். இதற்கு கார்யா   என்ற லாபநோக்கமற்ற அமைப்பின் அப்ளிகேஷனே காரணம். இந்த அமைப்பை டெல்லியை பூர்விகமாக கொண்ட மனு சோப்ரா தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். 2021ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் என்ற நிறுவனத்தில்   வேலை செய்த மனு, தனது வேலையை கைவிட்டு கார்யா என்ற ஆப்பை உருவாக்கத் தொடங்கினார். இந்த ஆப் மூலம், தாய்மொழியில் அதாவது கன்னடத்தில் குறிப்பிட்ட செய்தி பற்றிய டேட்டா மாடல்களை உருவாக்குகிறார்கள். குறிப்பிட்ட செய்தியை ஒருவர் துல்லியமான வட்டார வழக்கில் பேச வேண்டும். அவர் பேச்சின் துல்லியத்தைப் பொறுத்து அவருக்கு வருமானம் கிடைக்கும். ஒரு மணிநேர உழைப்பிற்கு 415.50