இடுகைகள்

இந்தியா காப்பிடங்கள். பிச்சை தடைச்சட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிச்சை எடுத்தேனும் வாழ்வது முக்கியம்!

படம்
பிச்சை எடுத்தாவது படி என்று சொல்லுகிற நாம், மாட்டின் நீருக்கு கூட பிறரிடம் உதவி கேட்க கூடாது. அதனை பிச்சையாக பெறக்கூடாது என்றும் கூறுகிறோம். தமிழ் இலக்கியங்களிலும் ஒன்றை உதவியாக கோரிப்பெறுவது என்பதை சரியான செயலாக கூறவில்லை. கொடுப்பதே முக்கியம் என்கிறார்கள். ஆனால் வேலையின்மை, கடன் ஆகியவற்றால் தடுமாறும் கிராமத்தினர் பலர், நகர்ப்புறங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகின்றனர். உ.பியிலிருந்து புனே, மும்பை நகரங்களுக்கு வருபவர்களுக்கு உதவுவது பிச்சைதான். எல்லோரையும் கூறவில்லை. கைகால் ஊனமானவர்கள், சிறுமிகள் என பலரும் இதில் உண்டு. சென்னையில் வட இந்திய தனத்தில் தலையில் முக்காடும், கையில் பையும் கொண்டு சில குழுவினர் அலைந்து கொண்டிருப்பார்கள். நுங்கம்பாக்கத்தில் பணத்தை மட்டும் பிச்சை எடுக்கும் ஒருவரையும் பார்த்திருக்கிறேன். ஒருநாள் அவருக்கு பசிதானே பிரச்னை இந்தா சோறு என சோற்றுப்பொட்டலத்தைத் தந்தவுடன் அவர் அதிர்ந்துவிட்டார். அதை எங்கே வைப்பது என தடுமாறினார். பின் அதனை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, அடுத்து கையேந்த தொடங்கினார். இந்த பிச்சை எடுக்கும் பழக்கம் ஈகைத்திருநாள் மாத த்