பிச்சை எடுத்தேனும் வாழ்வது முக்கியம்!
பிச்சை எடுத்தாவது படி என்று சொல்லுகிற நாம், மாட்டின் நீருக்கு கூட பிறரிடம் உதவி கேட்க கூடாது. அதனை பிச்சையாக பெறக்கூடாது என்றும் கூறுகிறோம். தமிழ் இலக்கியங்களிலும் ஒன்றை உதவியாக கோரிப்பெறுவது என்பதை சரியான செயலாக கூறவில்லை. கொடுப்பதே முக்கியம் என்கிறார்கள்.
ஆனால் வேலையின்மை, கடன் ஆகியவற்றால் தடுமாறும் கிராமத்தினர் பலர், நகர்ப்புறங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகின்றனர். உ.பியிலிருந்து புனே, மும்பை நகரங்களுக்கு வருபவர்களுக்கு உதவுவது பிச்சைதான். எல்லோரையும் கூறவில்லை. கைகால் ஊனமானவர்கள், சிறுமிகள் என பலரும் இதில் உண்டு.
சென்னையில் வட இந்திய தனத்தில் தலையில் முக்காடும், கையில் பையும் கொண்டு சில குழுவினர் அலைந்து கொண்டிருப்பார்கள். நுங்கம்பாக்கத்தில் பணத்தை மட்டும் பிச்சை எடுக்கும் ஒருவரையும் பார்த்திருக்கிறேன். ஒருநாள் அவருக்கு பசிதானே பிரச்னை இந்தா சோறு என சோற்றுப்பொட்டலத்தைத் தந்தவுடன் அவர் அதிர்ந்துவிட்டார். அதை எங்கே வைப்பது என தடுமாறினார். பின் அதனை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, அடுத்து கையேந்த தொடங்கினார்.
இந்த பிச்சை எடுக்கும் பழக்கம் ஈகைத்திருநாள் மாத த்தில் அதிகம் இருக்கிறது. இஸ்லாமில் தனது சொத்தில் 2 சதவீதத்தை இம்மாத த்தில் தேவைப்படுவோருக்கு வழங்க வேண்டுமென்பது இறைத்தூதரின் அறிவுரை. இன்று அதனை கடைபிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் பிச்சை எடுப்பவர்களுக்கு இது உதவுகிறது. 2011 ஆம் அண்டு சென்சஸ்படி இந்தியாவில் 3.7 லட்சம் பிச்சைக்கார ர்கள் உள்ளனர். இன்று இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கும். 1959 ஆம் ஆண்டு மும்பையில் பிச்சை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எதுவும் மாறவில்லை.
புனேவில் பிச்சை எடுக்கும் சஃபாட் அலி, பிச்சை எடுக்கும் காசில் தங்கும் வீடு வாடகை கொடுத்து, மனைவி மக்களுக்கு பணம் அனுப்பி, பெற்றோருக்கு பணம் கொடுத்தும் வருகிறார் என்றால் சம்பாத்தியத்தைப் பாருங்கள். குறிப்பிட்ட மதம் சார்ந்த விழாக்களில் மாத த்திற்கு 20 ஆயிரம் கூட கிடைக்கிறதாம். பலருக்கு இங்கே அது மாத சம்பளம் அல்லவா.
பிச்சை எடுப்பதற்காகவே ரம்ஜான் உள்ளிட்ட மத விழாக்கள், திருவிழாக்களுக்கு இடம்பெயர்ந்து வரும் பிச்சைக்கூட்டங்கள் உண்டு. இவர்களை போலீஸ் சிறையிலடைத்தாலும், அவர்களுக்கு அபராதம் 5 ஆயிரம் போட்டாலும் எந்த விளைவுகளும் இல்லை. ஒரு கட்டத்தில் பிச்சைகார ரிடம் வடிவேலு வாங்கித்தின்பது போன்ற கதைதான் போலீஸ்கார ர்களின் விஷயத்தில் நடக்கிறது. பின்னே ஒரு நாளைக்கு ரூ400 என சம்பாதித்தால், பிச்சைக்கார ர்களின் மீதும் போலீஸ் கைவைக்கத்தானே செய்யும்?
பிச்சை எடுப்பது குற்றம் என்கிறது இஸ்லாம். அதேசமயம் உதவி என கோருபவர்களுக்கு உதவு என்கிறது. இதில் உதவி தேவைப்படுபவர்கள் யார் என்பதுதான் தெரியவில்லை என்கிறார் இஸ்லாமியர் ஒருவர். சரிதான்.
நன்றி: எகனாமிக் டைம்ஸ் - மேகசின்