மது குடித்தால் மூளைக்குள் என்னாகிறது?
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி
மது குடித்தால் பதற்றம் ஏன் அதிகரிக்கிறது?
காதலில் பிரேக் அப் ஆகியிருக்கிறது என்றால் டாஸ்மாக்கில் போய் கல்ப்பாக சரக்கு போட்டீர்கள் என்றால் உடனே போனை எடுத்து காதலியிடம் சண்டை போடுவீர்கள். வம்பு இழுப்பீர்கள். காரணம், மது உள்ளே சென்றதும் உங்கள் மூளையில் உடலை தளர்வு செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேசமயம் அப்போது உங்கள் மனதை எது ஆட்கொண்டிருக்கிறதோ அந்த உணர்வை சற்றே உயர்த்தும். இதன்காரணமாக கோபத்துடன் டாஸ்மாக் செல்பவர்கள், சரக்கை அடித்து விட்டு வெளியே வரும்போது கொலை செய்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். எனவே, ஃபாரம் மாலில் எலைட் பார் திறந்திருக்கிறார்கள். அங்கு வாங்கி வீட்டில் வைத்து அருந்திவிட்டு கலவரம் செய்யாமல் கமுக்கமாக படுத்து தூங்குங்கள்.
செய்தி - படம் - பிபிசி