டைம் - இளம் தலைவர்கள் 2019
டைம் இளம் தலைவர்கள்
ஹாரி மியோ லின்
மியான்மர் என்று சொன்னாலே உங்களுக்குப் புரிந்துவிடும். ராணுவ சர்வாதிகார நாடு, அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இருந்தால்தானே அதிசயம்.
ஏறத்தாழ 50 ஆண்டுகள் ராணுவ சர்வாதிகாரம் செய்யப்பட்ட நாடு. மண்டாலே நாட்டைச் சேர்ந்த 28 வயது இளைஞரான மியோ லின், நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நிலவும் வெறுப்பு பேச்சு, வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக போராடி வருகிறார்.
ரோஹிங்கயே முஸ்லீம்கள் வன்முறை வெறியாட்டத்தில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த வேதனை நிகழ்வில், கூறப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் போராடினார் மியோ லின்.
2013 ஆம் ஆண்டு புத்த மத வெறியர்களால் மெய்கிட்டியலா எனும் நகரிலிருந்த மசூதி எரிக்கப்பட்டது. இக்கொலை வெறியாட்டத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மியோ லின் தி சீகல் எனும் தன்னார்வ அமைப்பை நிறுவி உதவினார். இவரின் உதவிகள் மதவாத அமைப்புகளை கோப ப்படுத்த, மியோ லின்னுக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வரத் தொடங்கின.
2017 ஆம் ஆண்டு சீகல் அமைப்பை விட்டு விலகியவர், வியன்னாவைச் சேர்ந்த கைச்சிட் எனும் அமைதி அமைப்பில் சேர்ந்தார். என்னுடைய மகள் இதுபோன்ற இடத்தில் நிலவும் அநீதிகளைப் பார்க்க கூடாது என்றே நான் நினைக்கிறேன். நம் அனைவருக்குள்ளும் பிறருக்குச் சொல்ல ஒரு கதை இருக்கிறது. சொல்ல முடியாத வலியும் வேதனையும் இருக்கிறது என்கிறார் மியோ லின்.
மூலம்: எலி மேய்க்ஸ்லர்
பியாட்ரிஸ் ஃபின்
ஆயுத எதிர்ப்பாளர், ஸ்வீடன்
அணு ஆயுத எதிர்ப்புக்காக 2017 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர், ஃபின். ஸ்வீடனின் கோதன்பர்க்கில் பிறந்தவரான ஃபின்னின் வகுப்பறை நண்பர்கள் பலரும் கோசோவன்ஸ், அல்பேனியன்ஸ், போஸ்னியன்ஸ் இன ஆட்கள்தான். நான் மனிதர்களை நல்லவர், கெட்டவர் என இனம்பிரிக்க சிரமப்படுகிறேன்.
36 வயதான ஃபின், ஜெனீவாவில் அணுஆயுத எதிர்ப்புக்கான பிரசாரத்தை செய்து வந்தார். 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இப்பிரசார பணியின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு ஐசிஏஎன் எனும் அணு ஆயுத எதிர்ப்பு அமைப்பின் இயக்குநராக உயர்ந்தார். இப்பணியைப் பயன்படுத்தி 122 நாடுகளுக்கு சென்று அணு ஆயுத ஒழிப்பு பணியைப் பிரசாரம் செய்தார். பல நாடுகளை அணு ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபடுத்துவதே எனது லட்சியம் என்கிறார் ஃபின்.
- சியரா நூஜென்ட்