அவளைப் போல் தெரிந்தாள்; கொன்றேன்!
அசுரகுலம்
சாங் ஜிங்குவா
சாங் ஜிங்குவா, ஒரே காரணத்திற்காகத்தான் கொலை செய்தார். அது சாயல்தான். தன் சகோதரரின் முன்னாள் காதலி போல தெரிந்த ஒரே காரணத்திற்காக ஒன்பது பெண்களை ஆக்டிவாக செயல்பட்டு போட்டுத் தள்ளினார்.
வெகுகாலமாகவே இவரும், இவருடைய சகோதரரும் சிறுசிறு திருட்டுகளை வயிற்றுக்காக செய்து வந்தனர். ஆனால் சீனாவில் காங்டி எனும் பகுதியில் செய்த கொலை அவர்களது வாழ்க்கையை மாற்றியது. அங்கு வண்டியில் வந்த ஒரு டிரைவரை கொள்ளையடித்து கொலை செய்தனர். இந்த குற்றத்திற்காக இவரது சகோதரர் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது இவருக்கு பதினேழு வயது என்பதால் எட்டு ஆண்டுகள் தண்டனையோடு தப்பினார்.
வெளியே வந்தவருக்கு நண்பர் யான் என்பவர் உதவினார். எதற்கு அண்ணனின் முன்னாளி காதலி எங்கே என்று கண்டறிய.ஆனால் அம்முயற்சி தோல்வியடைய, அச்சாயலில் இருந்தவர்கள் பலியானார்கள். பெண்களிடம் வேறெதும் இவர் தேடவில்லை. பணமும் உயிரை மட்டும்தான் கேட்டார். அவ்வளவுதான்.
பணம் கூட செலவழித்தால் காணாமல் போய்விடும். ஆனால் கொலை செய்த உடல்களை என்ன செய்வது? பெண்கள் காணாமல் போனதை போலீசும் கண்டுபிடித்திருந்தனர். அப்போது, எதேச்சையாக சாங்கின் ரூமை பக்கத்துவீட்டுப் பெண் பார்க்க, சார் கொன்ற பெண்ணின் தலையை மறைத்து வைக்கு பிரம்ம்பிரயத்தனம் செய்துகொண்டிருந்தார். முதலில் சரி, ஏதோ சிரம ப்படுகிறார் உதவலாம் என்றுதான் அப்பெண் நினைத்திருக்கவேண்டும். பின்னர்தான், அது வெட்டப்பட்ட தலை என்று தெரிந்து அழுகையை பயத்தை எச்சிலோடு சேர்த்து முழுங்கி போலீசுகுக்கு நம்பர் அழுத்தினார்.
சாங், போலீஸ் கேட்டதற்கு பெரிதாக பயப்படவில்லை. நான் பிடிபடுவேன் என்பது எனக்கே தெரியும். என்று தில்லாக சொன்னார். மரணதண்டனை விதிக்கப்பட, அதையும் உறுத்தலே இன்றி ஏற்றார். 2011 மே 27 அன்று தன் தண்டனையை ஏற்று இறந்துபோனார் சாங்.
ஆக்கம் - பொன்னையன் சேகர்
நன்றி: ரிவால்வி, விக்கிப்பீடியா, லிஸ்ட்வர்ஸ், பின்டிரெஸ்ட்