எதிர்ப்பு போராட்டங்கள்!


இந்தியாவில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள்!


இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே போராட்டங்கள் மூலம்தான் பல்வேறு உரிமைகள் கிடைத்துள்ளன. அரசின் பல்வேறு கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறைகளை தன்னெழுச்சியாக மாணவர்கள் கையிலெடுக்க பின்னர் அது மக்களை ஈர்த்து போராட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 1940 ஆம் ஆண்டு சென்னை மாணவர் சங்கம், மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை இந்த வழியில் தொடங்கியது.

Image result for anti hindi agitation

சட்டம் 343(2) படி பதினைந்து ஆண்டுகளில் இந்தியை ஆட்சிமொழியாக மாற்றுவதே இந்திய அரசின் நோக்கம். இந்தி பேசாத மாநிலங்கள் மத்திய அரசின் நோக்கத்திற்கு குறுக்கே நின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ்மொழி மட்டுமல்லாது தனி நாடு என்று கேட்டு போராடினர்.

அதற்குப்பிறகு இந்தி எதிர்ப்பு பேரலையில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் சீனிவாசன் என்ற மாணவர் போராட்டத்துக்கு தலைமை வகித்தவரிடம் தோற்றுப்போனார். பின்னர் மாணவர்களுக்கான அரசியலை திமுக அனைத்து கல்லூரிகளிலும் தொடங்கியது. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுத்து அவர்களை ஊக்குவித்து, தன்னை வளர்த்துக்கொண்டது.

பஸ்டே கொண்டாட்டம் மட்டும் இதன் அடையாளமல்ல. சென்னை மாநிலக்கல்லூரியின் அரசியல் அடாவடிகள் அனைத்தும் பின்னரே ஊக்கம் பெற்று தொடங்கின. மாணவர்களின் வழியாக இங்கும் அரசியல் கட்சிகள் தங்களுக்கான தொண்டர்களை உருவாக்கின.

இக்காலத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளத்திலும் இதே காட்சிகள் அரங்கேறின. மாணவர்களின் அரசியல் போட்டி, தேர்தல் ஆகியவற்றில் அங்கு இடதுசாரி கட்சிகள் முன்னே நின்றன. இப்படி உருவான மாணவர் தலைவர்கள் பின்னாளில் அரசியல் தலைவர்களானார்கள். அவர்களில் பிரகாஷ் காரத், டி ராஜா, ஜி ராமகிருஷ்ணன், கே பாலகிருஷ்ணன் பி ஆர் நடராஜன் ஆகியோர் முக்கியமானவர்கள்.




விமோசனா சமரம் (1958-59)

இடதுசாரி அரசை வீழ்த்த நடந்த போராட்டம் இது. இஎம்எஸ் நம்பூதிரிபாட் அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்தார். கத்தோலிக்க தேவாலயம், நாயர் சர்வீஸ் சொசைட்டி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய அமைப்புகள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டம், ஆட்சியை மாற்றியது. நம்பூதிரிபாட் 1959 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவிநீக்கம் செய்யப்பட்டார்.


இந்தி எதிர்ப்பு போராட்டம் (1965)

திமுக ஆட்சியைப் பிடிக்க உதவிய போராட்டம் இதுவே. குடியரசு தினத்தை அஞ்சலி தினமாக அனுசரிப்போம் என்று சொல்லி இந்தியை எதிர்த்த திமுக, இந்த விவகாரத்தின் வழியே உலக பிரபலமானது. ஆறுமணிநேரத்தில் இந்தி விவகாரத்தில் பச்சையப்பா கல்லூரி மாணவர்களைச் சந்தித்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.


நக்சல் அந்தோலன் (61-71)

நிலக்கிழார்களை எதிர்த்து நடந்த நக்சல்களில் போராட்டம். மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி  எனுமிடத்தில் விதைத்த விதை பின்னர் விருட்சமானது. மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் இன்று விலைபோனாலும் அன்று வீரியமாக முன்னே நின்றனர். கல்லூரி மாணவர்களின் பங்களிப்புடன் போராட்டம் நாடெங்கிலும் பல இளைய மனங்களை ஈர்த்தது வரலாறு சொல்லும் உண்மை.


நேரு பல்கலைக்கழகப் போராட்டம் 2016

ஜனநாயக குரல்கள் எங்கு தென்பட்டாலும் மூர்க்கமாக அதனை முடக்கும் தேசிய ஜனநாயக முன்னணி, இங்கும் பரபரப்பாக களமிறங்கியது. நேரு, இந்தியாவின் அனைத்து களங்கங்களுக்கும் கறைகளுக்கும் காரணம் என கூறிய மோடி, பல்கலைக்கழகத்தில் தேசவிரோத சுலோகன்களை சொன்னார்கள் என்று கூறி போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். இடதுசாரி கட்சி சார்பான கன்னையாகுமார் தீவிரவாதி அஃப்சல் குருவுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தினார் என்று கூறி சிறையில் விசாரணை செய்து சித்திரவதை செய்தது.

இதனால் மாணவர்களின் குரலுக்கு வலிமை கூடியதே தவிர குறையவில்லை.



நன்றி  டைம்ஸ்

மூலம்  கே சந்த்ரு