கடத்தல் பிஸினஸில் ட்ரோன்கள்!

Image result for smuggling drones



கடந்த ஜூன் 8 இல் அரசின் டிஆர்ஐ துறை சென்னையில் 48 ட்ரோன்களை கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த ட்ரோன்களின் மதிப்பு 23 லட்ச ரூபாய். இந்த ட்ரோன்களை எழும்பூரிலுள்ள கடைகளிலிருந்து அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த ட்ரோன்கள் சீனாவிலிருந்து மியான்மர் வழியாக இந்தியாவிற்குள் கடத்தப்படுகிறது. இதற்கு பயன்படும் அதே வழியில்தான் நம் நாட்டிற்குள் தங்கமும் பயன்படுத்தப்படுகிறது. தங்கமும் ட்ரோனும் ஒன்றா எனக்கேட்பீர்கள். ட்ரோன் மார்க்கெட் 2021 ஆம் ஆண்டுக்குள் 881 மில்லியன் டாலர்களை எட்டவிருக்கிறது.

சீனாவிலிருந்து பெரும்பான்மையான ட்ரோன்கள் விற்கப்பட்டு வருகின்றன. அதன் அசல் விலையை விட 40 சதவீதம் அதிகமாக உள்ளது.  சென்னையில் ட்ரோன்களை வாங்க முடியுமா? நிச்சயம் முடியும் ஆனால் பில் இல்லாமல்தான் கிடைக்கும். சென்னையில் 15 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் தினசரி இங்கு விற்கின்றன. இடைத்தரகர்கள் இதற்கும் உண்டு.

கடத்தல் ஐடியா

எலக்ட்ரானிக் ஐட்டம் என்று கூறி ட்ரோன்களை பகுதிப் பொருட்களாக வாங்கி பின்னர் ஆன்லைன் டுடோரியல் மூலம் அசெம்பிள் செய்து பயன்படுத்துகின்றனர். விற்கின்றனர். இதனைக் கண்டுபிடித்து சில ட்ரோன்களை சுங்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.


சீன ட்ரோன்களை ஸ்மார்ட் போன் ஆப் மூலம்தான் இயக்க முடியும். இதை இயக்கும்போது நம்முடைய தகவல்கள் சீன சர்வரில் பதிவாகின்றன. எனவே, ஆபத்து நமக்கும் உள்ளது. நாட்டிற்கும் உள்ளது. அமெரிக்க சீன ட்ரோன்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது இதன் பின்னணியை அறிந்ததால்தான்.

நன்றி: டைம்ஸ் - சித்தார்த் பிரபாகர்