ஜோஃப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்தின் ராஜதானி எக்ஸ்பிரஸ்



Image result for jofra archer bowling



கரீபியன் காளை ஜோஃப்ரா ஆர்ச்சர்



வலது கை வேகபந்துவீச்சாளர். மணிக்கு நூற்று நாப்பது கி.மீ வேகத்தில் புயலாய் தாக்கும் யார்க்கர்கள், பவுன்சர்களால் பல பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட் அடிக்கடி அடிபடுவது ஆர்ச்சரின் உபாயம்தான்.

பார்படாஸில் பிறந்து மேற்கிந்திய தீவுகளுக்காக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடியவர், இப்போது இங்கிலாந்து அணி ஜெர்சி அணிந்துவிட்டார். உலகக் கோப்பை அணியில் இங்கிலாந்துக்காக பந்து வீசி எதிரணிகளை மிரட்டி வருகிறார்.

மூன்று ஸ்டம்புகள்தான் இவரது குறி. அதற்கு குறுக்கே வரும் எதனையும் இவரது பந்து தகர்க்கிறது. அது பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டோ, கையோ, காலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. ஹெல்மெட்டில் அடித்து ஸ்டம்புகளை தகர்த்து பந்துகளும் உண்டு. அப்படி ஒரு வேகம். வயது 24 அதற்கான வேகத்தில் பந்து ஸ்டம்புகளை நொறுக்குகிறது.

இந்தியாவில் விராட் கோஹ்லி எப்படி எந்த பந்துகளைப் போட்டாலும் அடித்து நொறுக்கிறாரோ, அதேபோல்தான் ஜோஃப்ராவும். அடியேன் பார்க்கலாம் ப ந்துகளை ராக்கெட் வேகத்தில் வீசுகிறார்.


விளையாண்ட முதல் சர்வதேச போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானது. ஹஸீம் ஆம்லாவுக்கு போட்ட பந்து பவுன்சாகி அவரின் தலையில் அடிக்க, அவர் பீதியாகி ரிடையர்ட் ஹர்ட் ஆகி வெளியேற அணியின் நடுநிலை வரிசையே நிலைகுலைந்து போனது. இதற்கு முக்கிய பொறுப்பாளி கரீபியன் தீவில் பிறந்த ஆங்கில வீர ரான கிறிஸ் ஜோர்டான்தான்.

2012  ஆம் ஆண்டு, அவர் ஒரு மேட்சில் ஜோஃப்ராவின் பந்துவீச்சைப் பார்த்து ச செக்ஸ் அணிக்கும் பரிந்துரைக்க ஜோஃப்ரா அப்புறம் தன் திரும்பி பார்க்க க்கூட நேரமில்லை. பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டி(ஆஸ்திரேலியா ) அவரின் பந்துவீச்சு திறமையை ஊரு உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

அதன்பின்தான் 2019 ஆம் ஆண்டு பிரிமீயர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் இவரை தன் அணிக்குத் தேர்ந்தெடுத்தது.  ஐபிஎல் சீசனில் பதினைந்து விக்கெட்டுகளை சாய்த்த ஆள். பேட் பிடிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதிலும் சாதித்துவிட்டால் ஆல்ரவுண்டராக கலக்க தடையேதுமில்லை. இங்கிலாந்து அணியில் சில ஆண்டுகளுக்கு இடத்தை ரிசர்வ் செய்து தீவிரமாக விளையாடலாம்.

அதேசமயம் அப்போது கரீபியன் தீவிலிருந்து இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்து குடியுரிமை பெற்றிருந்த ஜோஃப்ரா தன் வாழ்க்கை குறித்து யோசிக்க வேண்டியிருந்தது. அவரின் பந்துவீச்சு இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழுவை யோசிக்க வைத்தது. நாட்டில் அயல் நாட்டினர் கிரிக்கெட்டில் பங்குபெறுவதற்கான விதிகளும் தளர்த்தப்பட்டிருந்ததால், ஜோஃப்ரா விளையாட எந்த தடையும் இல்லை.

கலப்பு மணம் புரிந்து பிறக்கும் பிள்ளையை வௌவால் என்பார்கள். ஜோப்ரா, ஆங்கிலேயருக்கும், பார்பாடிய தாய்க்கும் பிறந்த அப்படியொரு வௌவால்தான். முறைப்படி பார்த்தால் ஜோஃப்ராவுக்கு விளையாட வாய்ப்பு என்பது 2022 ஆம் ஆண்டுதான் கிடைக்கவேண்டும். ஆனால் இங்கிலாந்து அணி திறமையான ஆட்களின்றி தடுமாறிவருகிறது. எனவே, பையனை பிடித்துப் போட்டுவிட்டார்கள். ஜோஃப்ராவின் பந்துவீச்சு பிரமாதமாக இருக்கிறது. கிரிக்கெட் வீர ராக அவரின் எதிர்காலம் இதே விதமாக பயணித்தால், அவர் விரைவில் நாடறிந்த வீர ராக ஜொலிப்பார் என்கிறார் தேர்வுக்குழு உறுப்பினரான எட் ஸ்மித்.

சில ஆட்டங்களில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் ஜோஃப்ராவின் வயதுக்கு அவர் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்பவர்தான். எனவே விரைவில் அவர் சிறந்த வீர ராக உருவாகி வருவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு. அதனை அவர் பயன்படுத்திக் கொள்வாரா என விரைவில் தெரிந்துவிடும்.

நன்றி: தி வீக், கிரிக் இன்ஃபோ, யூட்யூப்