கொசுவைக் கொல்லும் பூஞ்சைக் காளான்!


Genetically engineered mushrooms used to kill malaria-carrying mosquitoes © Getty Images



மலேரியா கொசுக்களை கொல்லும் காளான்.


மரபணு மாற்றப்பட்ட பூஞ்சைக் காளான், தன்னிடமுள்ள விஷத்தின் மூலம் 45 நாட்களில் மலேரியா கொசுக்களை அழிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பார்க்க ஆல் அவுட் விளம்பரம் போல இருந்தாலும் விஷயம் உண்மைதான்.


மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த கொசு ஒழிக்கும் பூஞ்சைக் காளான் குறித்த ஆராய்ச்சியைச் செய்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த கண்டுபிடிப்பு குறித்து அறிவித்தனர். ஆனால் கொசுக்களை உறுதியாக அழிக்கும் என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


இந்த பூஞ்சைக் காளானின் பெயர் Metarhizium pingshaense. தன் மேல் உட்காரும் கொசுவை எளிதில் உணரும் காளான், குறிப்பிட்ட வேதிப்பொருளைச் சுரக்கிறது. அது கொசுக்களின் ரத்த த்தில் கலந்து அதன் இனப்பெருக்கும் திறனைக் குறைத்து அதனைக் கொல்லுகிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் ரேமண்ட் எஸ்டி லீகர். 


நன்றி: பிபிசி