டிவி, ரேடியோவுக்கு முன்னதாக நேரம் எப்படி அறிந்தோம்?

How did people set their clocks before TV and radio? © Getty Images


ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

டிவி, ரேடியோ கண்டுபிடிக்கப்படும் முன்னர் நேரம் எப்படி அறிந்தோம்?

சூரியனின் நிழலை வைத்து நேரம் அறிந்தோம். நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று கூறாதீர்கள். இது தோராயமான கணக்கு. துல்லியமான நேரம் ரயில்களுக்கு தேவை. எனவே, தந்தி கண்டறியப்பட்டவுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப சிக்னல்கள் அனுப்பப்பட்டன.

1830 ஆம் ஆண்டு மின் தந்தி வந்தபின் நேரம் குறித்து ரயில் நிலையங்களுக்கு தகவல் அனுப்புவது எளிதானது. பின் பல்வேறு நிலப்பரப்பு சார்ந்த இடங்களுக்கு சூரியன் வருவதையொட்டி ரயில்வே நேர அட்டவணை உருவானது. பல மாநிலங்கள் இங்கிலாந்தில் கூட நேர அட்டவணையை மாற்றிக்கொள்ள மறுத்தனர். 1880 ஆம் ஆண்டு பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு நேர அட்டவணையை மக்கள் ஏற்றனர். நாடு முழுக்க ஒரே நேரம் அமலானாது.

நன்றி: பிபிசி