மார்க்கெட்டுக்கு புதுசு ஜூன் 2019



மார்க்கெட்டுக்கு புதுசு



BenQ GV1 projector


BenQ GV1 projector


வீட்டில் ரெட்மீ டிவி மாட்டுவதற்கு வாட்டமான இடம் இல்லை. ஆனால் சினிமா போன்ற எஃபக்ட் வேண்டும் என்ன  செய்வது? அப்போது பென்க்க்யூ ப்ராஜெக்டரை நீங்கள் வாங்கித்தான் ஆக வேண்டும். 

போனிலிருந்து இணைத்து தமிழ்ராக்கர்ஸ் வீடியோக்களையும் பிளே செய்து மகிழலாம். இதற்கு முக்கியத்தேவை சுவர்தான். அதனை மட்டும் அழுக்காக்காமல் வைத்துக்கொள்ளுங்கள். போதும். முக்கியமான இதிலுள்ள ஸ்பீக்கர் பாடாவதி என்பதால் நல்ல கம்பெனி ஸ்பீக்கர்களை வாங்கி இணைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே. 

Muse 2 meditation headband



Muse 2 meditation headband


கண்களை மூடினாலே சொப்பனசுந்தரி கனவுகளுக்குள் மூழ்கி குறட்டை விடும் ஆட்களுக்கானதல்ல இந்த பேண்டு. இதனை ஸ்கூல் பிள்ளை போல நெற்றியில் மாட்டி காதில் அமுக்கி விட்டால் இந்த யோகா தினம் மட்டுமல்ல பிற நாட்களிலும் கூட தியானத்தில் மூழ்கலாம். 

பேண்டை காதில் மாட்டினால் எப்படி தியானம் வரும் என்றெல்லாம் கேள்வி கேட்டீங்கன்னா தேச துரோக வழக்கு உங்கள் மீது பாயும். கம்பெனிக்காரங்க தூத்துக்குடி வழியாக ஷார்ட் ரூட் பிடித்து தியானம் உங்கள் மூளைக்குள் பாய வழி இருக்கிறது என்கிறது கம்பெனி. ரைட் தேவைன்னா அமேசானில் ஆர்டர் பட்டனை அமுக்குங்க. 

நன்றி: பிபிசி