டீ குடித்தால் என்னாகும்?



Is it possible to drink too much tea? © Dan Bright




ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் என்னாகும்?


ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய டஸ்ட் டீயையே இன்றுவரை ரசித்து குடித்து பழகிவிட்டோம். இதிலும் நிறைய வகைகள் உண்டு. இதில் பயன்படுத்தும் பூச்சிமருந்துகளின் பாதிப்பும் நம் உடலில் தாக்கம் ஏற்படுத்துகிறது. விஷயம் டீ பாதிப்பு தருமா? என்றால் பெரியளவு கிடையாது.


டீயில் பாலிபெனல் எனும் ஆன்டி ஆக்சிடன்ஸ் உண்டு. இந்தியர்கள், சீனர்கள், ஆங்கிலேயர்கள் அதிகம் டீ அருந்தும் வழக்கம் கொண்டவர்கள். ஒரு நாளுக்கு மூன்று கப் என்பது சரியான அளவு. இந்த அளவு ஆன்டி ஆக்சிடன்ஸ் மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

ஒரு கப்பில் 40 கிராம் காபீன் டீயில் இருக்கிறது. இது காபியை விட பாதிதான். அமெரிக்காவில் உள்ள பெண் ஒருவர் டீ குடித்து தன் பற்களை இழந்தார். காரணம், பதினேழு ஆண்டுகளில் 150 டீ பேக்குகளை ஐஸ் டீயாக போட்டு குடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.


நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்