இடுகைகள்

டோவினோ தாமஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய்வாய்ப்பட்ட காதலனுக்கு, காதலி கொடுக்கும் அன்பு பரிசு! - லூக்கா - மலையாளம்

படம்
  லூக்கா -மலையாளம் லூக்கா மலையாளம் டோவினோ தாமஸ், ஆஹானா இயக்குநர் – அருண் ஜோஸ்   அதீத காதலும் அதன் விளைவுகளும்…. இப்படித்தான் இந்தப்படத்தின் கதையைக் கூற வேண்டும். லூக்கா என்ற ஓவியர், ஓவிய கண்காட்சி ஒன்றை வைத்திருக்கிறார். அதில் தோழி மூலம் பங்கேற்க வருகிறார் நிஹா. அங்கு வாய் சும்மாயிருக்காமல் இதெல்லாம் ஒரு படைப்பா என கேலி பேச, லூக்காவிற்கும் நிஹாவிற்கும் முட்டிக்கொள்கிறது. பிறகு மெல்ல சமாதானமாகி நட்பு கொள்கிறார்கள். பிறகு இருவருக்குமான கடந்தகாலம் தெரிந்துகொண்டபிறகு காதல் உருவாகிறது. லூக்காவின் பெற்றோர் முன்னமே துர் மரணங்களை சந்தித்தவர்கள். நிஹாவிற்கும் பாலியல் வல்லுறவு சார்ந்த மோசமான அனுபவம் இருக்கிறது. அதுவும் அவளின் மாமா மூலமாகவே. இதையெல்லாவற்றையும் மறக்க வைப்பதாக காதல், லூக்காவின் கலை இருக்கிறது. இப்போது சொன்னதெல்லாம் படத்தின் பின்பகுதியில் நாம் அறிவது. படத்தின் தொடக்கமே லூக்கா அவனது வீட்டில் இறந்துகிடக்கிறான். அவன் எப்படி இறந்தான், அவனது பின்னணி, அவனது நட்பு, எதிரிகள் என காவல்துறை அதிகாரி தேடிவருகிறார். அப்படி தேடும்போது நிஹா என்ற பெண் எழுதிய டைரி அவருக்கு கிடைக்கிறது

நண்பர்களோடு ஜாலியாக பழகிவிட்டு திடீரென காணாமல் போகும் ஒற்றை நண்பன்! - டியர் ஃபிரெண்ட் -

படம்
  டியர் ஃபிரண்ட் டோவினோ தாமஸ், தர்ஷனா ராஜேந்திரன் கோவாவில் சந்தித்து சிலருக்கு நெருக்கமாகும் ஒருவன் தான், ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்குவதற்கு ஊக்கம் கொடுக்கிறான். அந்த குழுவில் உள்ள நண்பன் ஒருவனுக்கு கல்யாணம் செய்துகொள்ளவும் உதவுகிறான். குழுவில் உள்ள ஒவ்வொருவரின் தேவைக்கும் அவனிடம் தீர்வும், சோகங்களுக்கு தோளும் தருகிறான். இப்படி இருக்கும் நண்பன் ஒருநாள் காலையில் திடீரென காணாமல் போகிறான். அவனைத் தேடி அலையும் நண்பர்கள் அவனைப் பற்றி மோசமான செய்திகளைக் கேள்விப்படுகிறார்கள். அதை அவர்கள் நம்பினார்களா, அவனது வாழ்க்கை என்னவானது என்பதே கதை.  பொதுவாக வாழ்க்கையில் நாம் பெறும் நண்பர்கள், அல்லது கிடைக்கிற நண்பர்கள் பிரியும் போது நாம் யோசிப்பது பொருளாதாரம் சார்ந்தும், உணர்ச்சிகள் சார்ந்தும்தான். பிரிவு இந்த இரண்டு விஷயங்களையும் யோசிக்க வைக்கும். டியர் ஃபிரெண்ட் படத்திலும் அதுதான் நடைபெறுகிறது.  இதில் டோவினோ தாமஸ் இருக்கும் குழுவிலேயே பயங்கர ஆக்டிவிட்டியான ஆள். எந்த பெண்ணும் விரும்புகிற அளவுக்கு கவர்ச்சிகரமானவன் தான். ஆனால் அவனைப் பொறுத்தவரை பணம் தான் முக்கியம். அதற்காகவே பலரிடமும் நெருக்கமான நண்பனாக ப

கிலோமீட்டர்களை கணக்குப்போடாமல் பயணம் போகலாம்! கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்

படம்
      கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர்     கிலோமீட்டர் அண்ட் கிலோமீட்டர் ஜியோ பேபி இசை சூரஜ் குரூப் பின்னணி சுஷ்யந்த் சியாம் கேரளத்தில் உள்ள சொந்த ஊரில் சின்ன மோட்டார்கள், வண்டிகளை பழுத்து பார்த்து வேலை செய்து வருகிறான் ஜோஸமோன். அவனுக்கு உள்ள கடமைகளில் முக்கியமானது. தங்கைக்கு கல்யாணம் செய்வது. அதற்கு காசுவேண்டுமே? இதற்காக அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலா பயணி கேத்திக்கு ஊரைச்சுற்றிக்காட்ட அப்பச்சன், ஜோஸமோனை தேர்வு செய்து அனுப்புகிறான்.  ஜோஸமோனுக்கு ஒரே ஆசை, அவனது அப்பாவின் புல்லட்தான். அதை அவனுடைய தந்தையாக பார்க்கிறான். ஆனால் அதனை பணமுடைக்காக விற்கும் சூழலில் கேத்தியின் வருகை அதனை தடுக்கிறது. சந்தோஷமாக வண்டியில் கேத்தியை கூட்டிக்கொண்டு செல்கிறான். கேத்தியைப் பொறுத்தவரை வாழ்க்கையும் காசுதான் முக்கியம். காசு இருந்தால் எல்லாமே வரும் என நம்புகிறாள். ஜோஸமோனுக்கு காசும் முக்கியம். உறவுகளும் முக்கியம் என்ற எண்ணம் மனதில் வலுவாக இருக்கிறது. இந்த இருவரும் செய்யும் பயணம் இருவருக்குள்ளும் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுதான் படம். ஜோஸமோன் ஆக டோவினோ தாமஸ், அப்பச்சன் ஆக ஜோஜூ ஜார்ஜ், கேத்தியாக

மலையாள மொழியில் தெலுங்குப்படம் - கல்கி படம் எப்படி?

படம்
கல்கி  - மலையாளம் இயக்கம் பிரவீன் பிரபாராம் ஒளிப்பதிவு  கௌதம் சங்கர் இசை ஜேம்ஸ் பிஜய் ஆஹா மலையாளப் படமா அல்லது தெலுங்குப் படமா என திகைக்கும்படி சண்டைக்காட்சிகளில் அனல் தெறிக்கிறது. எஸ்.ஐ கே, நஞ்சன் கோட்டை எனும் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி வருகிறார்,. அந்த ஊரில் அமர்நாத் என்பவர், மக்களை ஊருக்கு வெளியே கொண்டுபோய் வைத்துவிட்டு அங்கு துப்பாக்கிகளை தயாரித்து வருகிறார். இருவருக்குமான டிஷ்யூம் டிஷ்யூம்தான் கதை. இதை எப்போதும் போல மலையாளப்படங்களின் வேகத்தில் சொல்லாமல் பரபரவென சொல்லியிருப்பதுதான் படத்தைப் பற்றிப் பேசக்காரணம். டோவினோ தாமஸ்தான் படத்தின் பெரும்பலம். அடுத்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் பிஜய். தன்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்த்து எதிரிக்கு எதிராக நின்று போராடும் வேகம், போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ரவுடியை தீவைத்து எரிப்பது, ஊருக்குள் அமைதி கொண்டுவரை அசுரனாக நடந்துகொள்வது என காட்சிக்கு காட்சி பின்னி எடுக்கிறார். இவருக்கு நேர் எதிராக தில்லாக நிற்கிறார் சிவஜித் பத்மநாபன். நெஞ்சில் எப்போதும் எரியும் வன்மத்துடன் மீசையை முறுக்கியபடி நடக்கும்போது கத்தியை செருகி இழுத்த