இடுகைகள்

கதிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரு வேறு காலகட்ட கதிர் பாத்திரங்கள் சமூகத்திற்காக உழைக்கும் செயல்பாடுகள் - கதிர் 2022 - தினேஷ் பழனிவேல்

படம்
                கதிர் தினேஷ் பழனிவேல் இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. இரண்டிலும் கதிர் என்ற நபர் எப்படி செயல்படுகிறார். அவரது வாழ்க்கை எப்படி சமூகத்திற்கானதாக மாறுகிறது என்பதையே இயக்குநர் சொல்ல நினைத்திருக்கிறார். யாருக்காக, எதற்கு வாழ்கிறோம் என்ற கேள்விக்கு பதில் காண்பது முக்கியம். இதுதான் தந்தியில் போடுவது போல கதையின் மையம். 1970களில் நடக்கும் கதை. கோவையைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் உழைப்புக்கு நெல் அல்லாது கூலி தர சொல்லி கம்யூனிஸ்டுகள் கூற, அதை பின்பற்றும் விவசாயிகள் என்ன விளைவுகளை சந்தித்தார்கள் என்பது பின்கதையாக விரிகிறது. தொடக்கத்தில் காவல்துறையினர் மலைப்பகுதி அருகில் கைதிகளுடன் வர, திடீரென சொல்லி வைத்தது ஜீப் நின்றுபோக அங்கே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது. ஜீப்பின் பின்புறத்தில் ரத்தம் கசிகிறது. இதுதான் தொடக்ககாட்சி. இதற்குப் பிறகு படம் நவீன காலத்தில் நகர்கிறது. பொறியியல் படித்துவிட்டு ஊருக்குள் பீர் அடித்துவிட்டு சுற்றுபவன் கதிரவன். அவனது அப்பா, ஊருக்குள் தொழிலதிபராக இருக்கிறார். மகனைப் பார்த்து கவலைப்படுகிறார். சாதி மாறி கல்யாணம் செய்தவர்களை பிடித்து அடிக்கையில்