இடுகைகள்

மனமென்னும் இருட்குகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளையில் ஏற்படும் தவறான சிக்னல்களே ஆளுமை பிறழ்வுக்கு காரணம்!

படம்
  பொய்கள், ஏமாற்றுவது ஆகியவற்றுக்கு காலாவதி காலம் என்று ஒன்றுண்டு. எனவே, தங்களது பொய்கள் பிறருக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என சைக்கோபாத்கள் , வேறு வேறு நகரங்களுக்கு நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இப்படி செல்லும் பயணத்தில்தான் காதலும், உடலுறவும், அடுத்த தலைமுறையும் உருவாகின்றனர். சீனு வைட்லாவின் படத்தின் பாத்திரங்கள் போல தாங்கள் உருவாக்கிய பொய் உலகத்தில் அவர்களே மாட்டிக்கொள்ள நேரிடும்போது, உடனே அதிலிருந்து விலகி காணாமல் போய்விடுகின்றனர். வேறு நகர், வேறு நண்பர்கள். நட்புக்குழுக்கள், காதலிகள், திருமணங்கள் என வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். இதில் சில கோட்பாடுகளைச் சொல்லுகிறார்கள். அதாவது, சைக்கோபாத்களுக்கு மூளையில் குறிப்பிட்ட பகுதி முழுமையான வளர்ச்சி பெறுவதில்லை.இதனால்தான் அவர்களால் அவர்கள் பெற்ற குழந்தையைக் கூடன வளர்க்க முடிவதில்லை. மேலும் அவர்களின் தூக்கம் குறைவு என்பதால் மூளையின் வளர்ச்சியும் மிக குறைவாகவே உள்ளது என வாதிடுகிறார்கள். இதை தன்முனைப்பு அதிகம் கொண்ட, கோபம் கொண்ட குழந்தைகளுக்கும் கூட பொருத்திப் பார்க்கலாம். இயல்பு, ஊக்கம், நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை பலரும் கு

அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகை - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  அசுரகுலம் 4 - மனமென்னும் இருட்குகை அசுரகுலம் தொடர் வரிசை நூலில் இந்த நூல் மனம் பற்றி பேசும் நான்காவது நூல். ராபர்ட் ஹரே என்ற உளவியலாளரின் ஆய்வுகள் மற்றும் பல்வேறு கொலை வழக்குகளை உதாரணங்களாக மனமென்னும் இருட்குகை கொண்டுள்ளது. மனம் என்பது வெளியே தெரிவதில்லை என்பதால்தான் அதைப் பற்றி நம்மால் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய முடிகிறது. அப்படி செய்தாலும் கூட அதைப்பற்றி அறிந்திருப்பது மிகவும் குறைவுதான். உளவியல் ஆய்வுகளை ஒருவர் வாசித்தால் மட்டுமே குற்றங்களின் பின்னணி பற்றி எளிதாக அறிய முடியும். அதைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும். அசுரகுலம் தொடர்வரிசை நூல்கள் குற்ற இலக்கிய நூல் வகையில் வரும். எளிமையான வகையில் ஒருவரின் குற்ற உலகம், குற்றத்தின் காரணம், பாதிப்புகள், அதற்கான அவரின் எதிர்வினை ஆகியவற்றை நீங்கள் நூலில் வாசித்து அறியலாம். நூலை அமேஸானில் வாங்க....வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BRZH6PQ4 ஸ்கேன் செய்து வாங்க....