நிலநடுக்க பேரிடரில் தாயைக் காப்பாற்ற முயலாமல் மக்களைக் காப்பாற்றிய தந்தையை வெறுக்கும் மகள்!
லைட் சேசர் ரெஸ்க்யூ சீனதொடர் யூட்யூப் 40 எபிசோடுகள் அறுவை சிகிச்சை மருத்துவர், அவரது தந்தை என இருவருக்குமான வெறுப்பு, பாசப்போராட்டம்தான் முக்கிய கதை. நாயகன் வக்கீல், நாயகி மருத்துவர். இருவருக்குமான மோதல், காதல் எல்லாம் பிறகு வருகிறது. லைட் சேசர் ரெஸ்க்யூ என்ற மீட்பு அமைப்பு தன்னார்வமாக இயங்கி வருகிறது. அதற்கான நிதியை கேப்டன் குயின்சன் வழங்கி வருகிறார். அவர்தான் அதில் தலைவர்,பயிற்சியாளர். தனது அமைப்புக்கு தன்னார்வமாக பயிற்சி பெற வருபவர்களுக்கு மாதச்சம்பளம் கொடுக்கமுடியாவிட்டாலும் முறையான பயிற்சி, தங்குமிடம், உணவு ஆகியவற்றை வழங்குகிறார். கேப்டனின் மீட்பு படையில் உள்ள அனைவருமே பிழைப்புக்கு கூடுதல் வேலை ஒன்றை செய்து வருகிறார்கள். மீட்பு பணி என்பது உயிரைக் காப்பாற்றும் பெருமை என்பதால் அதிலுள்ளவர்கள் அனைவருமே அதை விரும்பி செய்கிறார்கள். நாயகன், பெருநிறுவனங்களுக்கான வக்கீல். நல்ல சம்பளம் தரும் சட்டசேவை நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு வாய் பேச முடியாத தங்கை ஒருத்தி இருக்கிறார். அவர் ஏன் வாய் பேசமுடியாமல் போனார் என்பதற்கு பின்கதை உள்ளது. அதை தொடர் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர...