இடுகைகள்

மூக்கு கண்ணாடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரலாற்றை மாற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கழிவறை, காம்பஸ், வெடிமருந்து, கடிகாரம்

படம்
                    காம்பஸ் கி . பி 200 இரும்பினால் ஆன காம்பஸை முன்னர் சீனர்கள் கண்டுபிடித்தனர் . இவர்கள் கண்டுபிடித்த தற்கு பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் காந்த காம்பஸ் கண்டுபிடிக்கப்பட்டது . இதற்குப்பிறகுதான் கப்பலில் மாலுமிகள் எளிதாக வழி கண்டுபிடித்து புதிய தேசங்களுக்கு சரியாக கடல் வழி கண்டுபிடித்து செல்ல முடிந்தது . இதன்மூலம் கடலில் பல்வேறு சீதோஷ்ண நிலை மாற்றங்களுக்கு பயப்படாமல் பயணித்தனர் . 16 ஆவது மற்றும் 17 ஆவது நூற்றாண்டில் காம்பஸ் பெரிய புரட்சியை செய்தது எனலாம் . கடிகாரம் 13 ஆம் நூற்றாண்டு முள் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் நீர் , மணல் மூலம் கடிகார நேரம் கணிக்கப்பட்டு வந்தது . 13 ஆம் நூற்றாண்டில் மெல்ல எந்திர கடிகாரங்கள் உருவாக்கப்படத் தொடங்கின . அந்த காலகட்டத்தில் இதனை யார் கண்டுபிடித்தார்கள் என்பதை பெரிதும் மக்கள் கவனிக்கவில்லை . ஆனால் இவை தென்பட்ட இடமாக தேவாலயங்களே இருந்தன . 14 ஆவது நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த தேவாலயங்களில் கடிகாரங்கள் தென்பட்டன . பின்னர் எந்திர கடிகாரங்களின் நேர துல்லியம் மெல்ல அதிகரித்து 30 ஆண்டுக