இடுகைகள்

சூழல் போராளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் போராளிகள் அறிமுகம்! பசுமை முதல் கழிவுகள் வரை

படம்
கல்பனா மணிவண்ணன் சூழலின் மீது நமக்கு நம்பிக்கை குறையும் போதெல்லாம் இந்த நாயகர்கள்தான் நம் வாழ்க்கை மீது  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். அதற்காக இவர்கள் ஏமாற்றங்களையும் ஏளனங்களையும் எதிர்கொள்ளாதவர்களல்ல. அதிலிருந்து மீண்டு தன் லட்சியத்தை இமயமாக்கி அதையும் சாதித்து இருப்பவர்கள். இப்போது சூழல் போராளிகளில் சிலரைச் சந்திக்கலாம் வாங்க. கல்பனா மணிவண்ணன் 44 கல்பனா சென்னையைச் சேர்ந்தவர். பரபரப்பான சாலையில் வசிப்பவர். இவர் உயிரியல் வகுப்பு எடுக்கும் ஆசிரியையும் கூடத்தான். வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை சாப்பிட்டு வெறுத்துப்போனவர், அவற்றைத் தவிர்க்க இன்று கல்பவிரிக்ஷா என்ற பண்ணையில் தன் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை விளைவித்து வருகிறார். நாம் பயன்படுத்தும் தரை துடைப்பான்கள், கழிப்பறை துடைப்பான்கள் ஆகியவற்றில் கடுமையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை நம் குடலிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கின்றன. இதனால் நம் உடல் நலம் கெடுகிறது என்று பேசுகிறார் கல்பனா. இவர் காய்கறிகளோடு ஆர்கானிக் முறையில் வீட்டின் தரை துடைப்பான்களையும் தயாரித்து வருகிறார். சமீரா சதீஜா 46 சமீர

மக்கள் கொடுத்த பொறுப்பை அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்! - துன்பெர்க்

படம்
நேர்காணல் - கிரேட்டா துன்பெர்க் உலகளவில் இயற்கை சூழலியலுக்களான நாயகியாக மாறியிருப்பவர் இவர்தான். ஸ்வீடனைச்சேர்ந்த பதினாறு வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க், சூழலியலுக்காக போராடுவதில் முன்நின்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். வெப்பமயமாதலை சமாளிக்க இந்தியா என்ன செய்யவேண்டும்? அது குறித்த பிரசாரத்தை மக்களிடம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு வெப்பமயமாதலைக் குறைக்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தவேண்டும். இந்தியா வளரும் நாடு என்பதால் அதனை விட ஸ்வீடன் நாடு இதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென நினைக்கிறேன். மோடிக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? பிரதமர் மோடி வெப்பமயமாதலை முக்கியமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயலாற்றவேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை இந்த பிரச்னையின் விளைவுகளை உணரமாட்டார்கள். உங்களுக்கு பொறுப்புகள் இருந்தாலும் அதனை நிறைவேற்றாதபோது உலகமே பின்னாளில் உங்களை அவதூறாக பேசும். இந்தியாவிலுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? வெப்பமயமாதலுக்காக போராடும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நான் வ