இடுகைகள்

அணுக்கழிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அணுக்கழிவுகளை பாதுகாக்க பின்லாந்து செய்யும் முதல் முயற்சி!

படம்
  அணுக்கழிவுகளுக்கான நிரந்தர பாதுகாப்பிடம்! ஃபின்லாந்தின் மேற்கு கடற்புரத்தில் அமைந்துள்ளது, ஒல்கிலூடோ தீவு (Olkiluoto). இங்குதான் உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிரந்தர அணு உலைக் கழிவுகளுக்கான பாதுகாப்பிடத்தை உருவாக்கி வருகின்றனர்.   இங்குள்ள அணுக்கழிவு செயல்பாட்டு அறைகள், கதிர்வீச்சைத் தடுக்க  தடிமனான கான்க்ரீட் சுவர்களால் கட்டப்படுகின்றன. பாதுகாக்கவேண்டிய யுரேனியக் கழிவு, உயரமான செம்பு பெட்டகத்தில் அடைக்கப்படுகிறது. பிறகு, பெட்டகம் பென்டோனைட் களிமண்ணால் (Bentonite) உறுதியாக அடைக்கப்படுகிறது.  பின்னர், பெட்டகம் கடல்மட்டத்திலிருந்து 420 கி.மீ. கீழே பாறைகள் சூழ்ந்த இடத்தில்தான் பாதுகாப்பாக வைக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதற்கென பூமியின் ஆழத்தில்  430 சுரங்கங்களை உருவாக்கி வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் அணு உலை மின்சார உற்பத்தியை மெல்ல குறைத்து வருகின்றனர். காரணம், அணுஉலை கழிவுகளால், சூழலுக்கு ஏற்படுத்தும் மாசுபாடுகளே காரணம். ஃபின்லாந்து, கார்பன் வெளியீடு இல்லாத மின்சாரத்தை தயாரிப்பதாக, ஐரோப்பிய யூனியனில் கூறியுள்ளது. நான்கு ரியாக்டர்கள் ஒல்கிலூடோ  தீ