இடுகைகள்

காமெடி திருடர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காமெடி திருடர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

படம்
காமெடி திருடர்கள்! உழைத்து சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதைவிட கஷ்டம் அதைத் திருடிக் கொள்ளையடித்து சென்று சோக்காளியாக வாழ்வது. திருடர்களின் அசகாயர்களும் உண்டு, அசடுகளும் உண்டு. அதில் சிலர்... கேட்காத காது! ஜெர்மனியில் நடந்த திருட்டுக் கதை இது. பெர்லினில் உள்ள வங்கியில் நுழைந்த திருடர் துப்பாக்கியைக் காட்டி பணத்தை பேக்கில் நிறைக்கச் சொன்னார். கேஷியரும் வியர்த்து வழிந்தபடி,  பணத்தை பேக்கில் போட்டார். அப்போது பேக் நிரம்ப, இன்னொரு பேக் வேண்டுமா என ஊழியர் கேட்டார். அதற்கு, அத்திருடர், கையில் வைத்திருக்குக்கும் துப்பாக்கி ஒரிஜினல்தான் என்று பதில் சொல்லியிருக்கிறார். காது டமாராமா? என புன்னகைத்தவர் உடனே போலீசை அழைக்கும் அலாரத்தை ஒலிக்கவிட, திருடர் மாட்டிக்கொண்டார். இலவச வலை! இங்கிலாந்தின் டெர்பிஷையரில் இருந்த சிலருக்கு தபாலில் வந்த கடிதம் ஆச்சரியமளித்தது. அவர்கள் போட்டியில் வென்றுள்ளதாகவும், அதற்குப் பரிசாக பீர் வழங்கப்படும் என்று எழுதியிருந்ததைப் படித்ததும் உச்சி குளிர்ந்து போயினர். சொன்ன இடத்திற்கு வந்தவர்களை போலீஸ் லத்தியில் முட்டிக்கு முட்டி தட்டி கெட்டியாய் காரில் ஏற்றி

காமெடி செய்த திருடர்கள்!

படம்
காமெடி திருடர்கள்! கம்பி எண்ண வைத்த கழுதை! கொலம்பியாவில் நடந்த கூத்து இது. மளிகைக் கடை ஒன்றை திருடர்களை சுழி சுத்தமாக கத்தி கபடாக்களை வைத்து கொள்ளையடித்தனர். அதெல்லாம் பிரச்னையில்லை. கல்லாவில் உள்ள பணத்தைக்கூட துடைத்து எடுத்தாயிற்று. ஆனால், போலீசில் பத்து நிமிடங்களில் மாட்டிக்கொண்டார்கள். உணவு மற்றும் ரம் பாட்டில்களை திருடிய கொள்ளையர்கள் அதனை மோட்டார் வண்டியில் ஏற்றியிருக்கலாம். எகானாமி முக்கியம் என்று நினைத்தார்களோ, மேக் இன் கொலம்பியா திட்டத்தை பின்பற்றலாம் என நினைத்தார்களோ மாட்டிக்கொண்டார்கள். காரணம் , கழுதைதான். ஏராளமாக சுமையை ஏற்ற, அது பச்சாவோ, ஆபத்து, ஐம் இன் டேஞ்சர் என அத்தனை மொழிகளிலும் ஆபத்தை கத்தி கதறி உலகிற்கு சொல்ல, அருகில் நின்ற போலீஸ் உஷாராகி திருடர்களை அடித்து உதைத்து வெளுத்து விட்டனர். முக்கியமான தகவல் அந்த கழுதையின் பெயர் எக்ஸேவி. ரெடியா இருங்க ப்ரோ! நம் நண்பர்களில் சிலர் கூட இப்படித்தான். எங்கு செல்லும்போதும் முன்னேற்பாடுகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். பஸ் இருக்குமா, பாத்ரூமில் பக்கெட் வச்சுருப்பாங்களா, சில்லறை வச்சிருக்கியா, வழி தெரியுமா என