இடுகைகள்

காடுகள் அழிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காடுகளை அழித்தால் இனி வரும் காலத்தில் நுண்ணுயிரிகளின் தாக்குதல் கூடும்!

படம்
மரங்களை அழித்தால் நோய் பரவும் ! சோனியா ஷா , எழுத்தாளர் . ஆங்கிலத்தில் : சோபிதா தர் நீங்கள் 2016 ஆம் ஆண்டு எழுதிய பான்டெமிக் என்ற நூலில் கொரோனா தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று முன்னரே கணித்து எழுதியுள்ளீர்கள் . எப்படி ? 2010 ஆம் ஆண்டு ஹைதியில் காலரா பாதிப்பு ஏற்பட்டது . பொதுவாக நாம் காலராவை ஏழைகளுக்கு வரும் நோய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் . ஆனால் காலரா பாதிப்பு நியூயார்க் , லண்டன் , பாரிஸ் ஆகிய பகுதிகளை பாதித்தது . இதனை நீங்கள் எப்படி புரிந்துகொள்வீர்கள் . நான் சீனாவில் இன்று நோய் பாதித்துள்ள பகுதிகளை முன்னரே சென்ற பார்வையிட்டுள்ளேன் . த வைரஸ் தாக்குதல்கள் பலமுறை ஒருவரைத் தாக்கும் என்பதை நோய்களின் வரலாறு பற்றி படித்தாலே அறிய முடியும் . நீங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 300 வைரஸ் கிருமிகள் உருவாகியுள்ளதாக கூறுகிறீர்களே ? அது எப்படி ? நான் கூறியது உண்மைதான் . ஏறத்தாழ உலகில் பரவிய நோய்களில் 60 சதவீதம் விலங்குகள் மூலம் பரவியதுதான் . மிருகங்கள் இன்று வெப்பமயமாதல் மூலம் மனிதர்களின் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்ந்த