இடுகைகள்

பொருளாதாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஆராய்ந்த பொருளாதார அறிஞர்!

படம்
  கிளாடியா கோல்டின்  claudia goldin கடந்த அக்.9 அன்று அதிகாலை 4.30 இருக்கும். அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவருக்கு பொருளாதார ஆய்வுக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதாக செய்தி கூறப்பட்டது. இந்த வகையில் அப்பரிசை பெறும் மூன்றாவது பெண்மணி கிளாடியா. எழுபத்தேழு வயதாகும் கிளாடியா, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். இந்த வகையில் கூட அவர் முதல் பெண்மணி. வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு, பிரச்னைகள், பாலின பாகுபாடு, சம்பளம் ஆகியவற்றை பற்றிய ஏராளமான ஆய்வுகளை கிளாடியா செய்துள்ளார். நாம் எப்போதும் குடும்பத்தில் உள்ள ஆண்கள், ஆண் குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். திருமணமான, விதவையாக உள்ள பெண்களைப் பற்றி, அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கைப் பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. வரலாற்றிலும் அவர்களைப் பற்றிய தகவல்களை தேடி அறிய வேண்டும் என்றார் கிளாடியா.  நான் யாருக்கும் எந்த அறிவுரையையும் கூறுவதில்லை. ஆனால் ஒன்றை மட்டும் எனது மாணவர்களுக்கு கூறுகிறேன். உங்களுக்கு செலவழிக்க நிறைய நேரம் கையில் இருந்தால், அதை சோதனை செய்ய புதிய விஷயங்களை அறிய பயன்படுத்துங்கள்.  -சா

இந்தியாவிற்கு தேர்தலை இலக்காக கொள்ளாத தலைமை தேவை! - ரகுராம் ராஜன், பொருளாதார வல்லுநர்

படம்
  பொருளாதார வல்லுநர், முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம்ராஜன்  நேர்காணல்  உலகப் பொருளாதாரம், இந்தியாவின் நிலை என இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்? ஆண்டு தொடங்கும்போது உலகப்பொருளாதாரத்தின் முன் நிறைய கவலைகள் இருந்தன. இந்தியாவைப் பற்றி கவலைப்படவும் நிறைய விஷயங்கள் உள்ளன. அமெரிக்க பொருளாதாரம் மெல்ல வேகம் இழந்ததற்கான அறிகுறிகளை கண்டோம். இந்த பாதிப்பு கடுமையாக அல்லது மென்மையாக இருக்குமா என்பதுதான் கேள்வி. கடினமாக இருக்கும் என்பதுதான் அடையாளம் கண்ட விஷயம். எனவே, முழு உலகமும் இந்த வழியில் பயணிக்கிறது.  பெருந்தொற்று காலத்தில் இருந்து சீன பொருளாதாரம் பெரிதாக முன்னேற்றமடையவில்லை. ஐரோப்பிய பொருளாதாரமும் கூட வேகம் பெறவில்லை. தொய்வடைந்துதான் உள்ளது. இந்தியாவைப் பார்த்தால், இந்தாண்டு சிறிது வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாம் இந்த விஷயங்கள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  எந்தெந்த விஷயங்களை, முக்கிய அம்சங்களை கவனமாக பார்க்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?  2021ஆம் ஆண்டு தொடங்கி வெளிநாட்டு முதலீடுகள் குற

டைம் 100 - கண்டுபிடிப்பாளர்கள் வரிசை

படம்
  மோரி சாக்கோ, சமையல் கலைஞர் கலாசாரத்தை சமைக்கும் கலைஞர் மோரி சாக்கோ 30 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு வெளியே பிறந்து வளர்ந்தவர். மங்கா காமிக்ஸ் மேல் அபரிமிதமான ஆர்வத்தோடு படித்தவர், ஜப்பான் நாட்டு கலாசாரத்தை உள்வாங்கிக்கொண்டார். ஆப்பிரிக்காவில் ஒன்பது பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவருக்கு டிவி சேனல்கள்தான் உலகமாக இருந்தன. டாப் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் சாதித்தவர், மோசுகே என்ற உணவகத்தை பாரிசில் நடத்தி வருகிறார். மோரி சமைக்கும் உணவுகள் அனைத்துமே அவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டவைதான். பிரான்ஸ், ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய கலாசாரத்தை பின்னணியாக கொண்டவை. தனது சமையலில் அவர் யார் என்பது இதுவரை விட்டுக்கொடுக்காதவர். ஓமர் சை   மீரா முராட்டி 34 செயற்கை நுண்ணறிவில் தேடல் மீரா முராட்டி, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராக இருக்கிறார். பல்வேறு கலாசார வேறுபாடுகளைக் கொண்ட குழுக்களை உருவாக்கி அவர்களை நிர்வகிப்பது, செயற்கை நுண்ணறிவை ஜனநாயகப்படுத்துவது என இயங்கி வருகிறார். ஓப்பன் ஏஐயின் வளர்ச்சியில் மீரா முராட்டிக்கு முக்கிய பங்குண்டு. எளிமையான ஸ்டார

வேலையின்மையால் சேவைப் பணியாற்றும் இளைஞர்களை அடிமையாக நடத்தும் சேவை நிறுவனங்கள்!

படம்
  இன்றைய காலம் சூப்பர் ஆப்களின் காலம். தினசரி தேவைகள் அனைத்தையும் ஆப் மூலம் ஆர்டர் செய்து பெறலாம். தேவை கையில் காசு மட்டும்தான். தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிறு, குறு நகரத்தில் இருந்தும் பொருட்களை ஆர்டர்   செய்து பெற முடியும். இணையமும் வளர்ந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்தும் அந்தளவு வேகமாகியிருக்கிறது.   இந்தியாவின் சில்லறை வர்த்தம் 900 பில்லியன் டாலர்கள் எனில் அதில் இ மார்க்கெட்டின் பங்கு தற்போதைக்கு 6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இப்போதைக்கு இது குறைவுதான் என்றாலும் 2027ஆம் ஆண்டு 500 மில்லியன் மக்கள்   இ மார்க்கெட்டிற்கு நகர்ந்து சந்தை பங்களிப்பை 170 பில்லியனாக அதிகரிப்பார்கள் என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். இ மார்க்கெட் இப்படி பெரிதாவது பெரு நிறுவனங்களை அதில் நுழைய வைக்கும். இதனால் சேவை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கருத்துகள் வெளியாகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்கள் இத்துறையில் இறங்கிவிட்டன. இதன்விளைவாக பொருட்களின் விலை கட்டுப்பாடு என்பது பெருநிறுவனங்களில் கைக்கு

தெரிஞ்சுக்கோ - நாடும் நாட்டு மக்களும்

படம்
  தனது நாட்டின் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை கலவரத்தை பற்றி, அதன்     ஆட்சித்தலைவர் புன்னகையுடன பேச முடிகிற காலத்தை எட்டியிருக்கிறோம். சமகாலத்தில் உற்பத்தி திறனில் அல்ல மக்கள்தொகையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நிறைய மக்கள் நாட்டை விட்டு வேறு இடங்களுக்கு வேலை தேடி, பொருளாதாரத்திற்காக நகர்கிறார்கள். பணக்காரர்கள், ஏழைகளுக்கான வேறுபாடு என்பது மேலும் அதிகரித்தபடியே இருக்கிறது.நாடு, நாட்டு மக்கள் பற்றிய   சில புள்ளிவிவரங்களைப் பற்றி பார்ப்போம்.   250 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் தோராய ஆயுள 29 ஆண்டுகள். 2019ஆம்ஆண்டு 72 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் உலகெங்கும் 140 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் மட்டும் 55 மில்லியன் மக்கள் ஹாங்காங்கிற்கு வருகை தந்துள்ளனர். உலகளவில் வறுமைக்கோடு என்பது, தினசரி 1.90 டாலர்களுக்கு குறைவாக சம்பாதிக்கும்   மக்களை கணக்கிட்டு உருவாக்கப்பட்டது.   2019ஆம் ஆண்டு ஐரோப்பாவில் 141 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். 2018ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு, இடம்பெயர்ந்த 52 சதவீத அகதிகளி

அதிவேக வேளாண்மை விரிவாக்கத்தால் சிதைந்துபோன சூழல் சமநிலை!

படம்
  உரங்களால் கெட்டுப்போன சூழல் சமநிலை 1960ஆம் ஆண்டு அதிக விளைச்சல் தரும் விதமாக வேளாண்மை துறை மாற்றப்பட்டது. ஏனெனில் அதிகளவு மக்கள்தொகை உருவாகத் தொடங்கிய சூழல். இதனால் காடுகள் அழிக்ககப்பட்டு நன்னீர்நிலைகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படத் தொடங்கின. உணவு உற்பத்தி அதிகரித்தது உண்மை. அதேநேரம் வறுமை, உணவு வீணாவது, மக்களுக்கு இடையே பொருளாதார பாகுபாடு, வசதிகளைப் பெறுவதில் பெரும் இடைவெளி ஆகியவையும் ஏற்பட்டன. உலக நாடுகளில் பல கோடி மக்கள் பட்டினியாக கிடந்தனர். அடிப்படையான நுண் ஊட்டச்சத்து சிக்கலும் எழத் தொடங்கியது. உணவுக்கு கொடுத்த விலை எந்திரமயமாதலுக்கான முதலீடு, தொழிலாளர்கள், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவை காரணமாக வேளாண்மை துறை முன்னேற்றம் கண்டது. அதிக விளைச்சல் கொண்ட பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக இயற்கையில் சூழல் ரீதியான பின்விளைவுகள் உருவாயின.   மாசுபாடு, பல்லுயிர்த்தன்மை அழிவு, மண்ணின் வளம் அழிவது, ஒரேவிதமான பணப்பயிரை பயிரிடுவது, பண்ணை விலங்குகளின் நலனில் கவனக்குறைவு ஆகியவற்றை உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய உரங்களின் தேவை அதிகமா

ஒரே சமயத்தில் சங்கிலித் தொடராக நடைபெறும் சூழல் பிரச்னைகள்!

படம்
இந்தியாவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் 21 விமானங்கள் எப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது, அப்படியான சூழலில் விமானியை குறை சொல்லி அரசு தப்பிக்குமோ சூழல் பிரச்னையும் இதேபோலத்தான் நேருகிறது. ஏழை மக்களின் உணவு உண்ணும் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் செய்யும் பித்தலாட்டங்களை மறந்துவிடுகிறார்கள். எல்லாம் வாங்கும் இனாமிற்கான விசுவாசம் வேறொன்றுமில்லை.  கடலில் வெப்பநிலை உயரத் தொடங்கினால், உடனே பவளப் பாறைகள் அழியத் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் பவளப்பாறைகள் அழியும் அளவு கூடி வருவதால் விரைவில் அதன் பாதிப்பை உணரத் தொடங்குவோம் என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூழல் பாதிப்பிற்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவேண்டுமென சில பத்திரிகைகள் எழுதி வருவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். பல நாடுகள் நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என சூளுரைத்து பேசுகின்றன. காசுக்கு மண்டியிடும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களின் பேச்சை குழப்பமின்றி வெளியிட்டு விசுவாசம் காட்டுகின்றன. முன்னேறியபிறகு மனிதர்கள் பூமியில் உயிர்வாழ இருப்பார்களா என்பதே சூழல் போராட்டக்

ஜிடிபி பற்றி தெளிவாக புரிந்துகொள்வோம் வாங்க! - எது உண்மை, எது பொய்?

படம்
  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன? ஒரு நாட்டின் எல்லைக்குள், குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருள், வழங்கப்படும் சேவைகளின் பண மதிப்பு அல்லது சந்தை மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி எனலாம். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, நாட்டின் பொருளாதார நலத்தைப் புரிந்துகொள்ள உதவும் மதிப்பெண் அட்டை போல…. பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆண்டுதோறும் அல்லது காலாண்டு அடிப்படையிலும் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், காலாண்டு அடிப்படையில் ஆண்டு முழுக்கவுமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுகிறார்கள். இப்படி பெறும் தகவல்களில் பணவீக்கத்திற்கு ஏற்ப பொருட்களின் விலைகளில் சற்று மாறுதல்கள் செய்யப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் புரிந்துகொள்வது எப்படி? அரசு செய்யும் செலவுகள், முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், செலுத்தப்பட்டுவிட்ட கட்டுமானச் செலவுகள், தனியார் நிறுவனங்களின் சரக்குகள், மக்களின் நுகர்வு, ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு ஆகியவை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படும். இறக்குமதி  செய்த பொருட்களின் மதிப்பு கழிக்க

இந்தியாவுக்கு ஏற்றதா காந்தியப் பொருளாதாரம்? - எதிர்கொண்ட முரண்பாடுகள்

படம்
         காந்தியப் பொருளாதாரம் முக்கியமானது எப்படி?   இன்று உலகளவில் வெளியான பொருளாதார நூல்களை எடுத்துக்கொண்டால் அதில் , ஒரு பத்தியேனும் காந்தியப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பார்கள் . காந்தி , சுயராஜ்யம் நூலில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா இருக்கவேண்டுமென கூறியிருந்தனர் . இந்த கருத்தை அப்போது இருந்த தலைவர்களான கோகலே , நேரு , ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாவர்க்கர் அந்தளவு நம்பிக்கையாக எதிர்கொள்ளவில்லை . ஆனால் காந்தி அந்த சிந்தனையைத்தான் சர்வோதயா எனும் அமைப்பாக மாற்றிக் காட்டினார் . மத்திய அரசு நடத்திவரும் காதி அமைப்பும் காந்தியின் சிந்தனை வழியாக உருவான அமைப்பேயாகும் . இந்த அமைப்புகள் மூலம் கைத்தொழில் கற்ற மக்களுக்கு வருவாய் ஈட்டும் வழி கிடைக்கிறது . பாலியெஸ்டர் நிறுவனங்களுக்கு ஆதரவாக அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு கதரைப் போற்றுதும் என காந்தி செயல்படவில்லை . தான் பேசிய விஷயங்களையே செயல்பாடாக செய்து காட்டினார் . இவரது சிந்தனைகளை அடியொற்றி இரு பொருளாதார அறிஞர்கள் உருவானார்கள் . அவர்கள் - ஜே சி குமரப்பா , வினோபா பாவே என்ற இருவரும் இந்தியாவின் சுயசார்பை