ஊடகச் செல்வாக்கில் இந்தியாவை முந்திச்செல்லும் சீனா!

 

 

 




 

 

 

 

ஊடக செல்வாக்கில் கொடிகட்டிப் பறக்கும் சீனா!

அற மதிப்பீடுகள், பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் குழுக்கள், ஆன்மிகம், மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது, நல்லிணக்கம், அறிவு, நேர்மை, விசுவாசம் ஆகிய அம்சங்கள் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பொதுவானவை. இவற்றின் அடிப்படையில்தான் இவ்விரு நாடுகளிலுள்ள அதிகாரம் தன்னை வலுப்படுத்திக்கொண்டு வாழ்கிறது.

இந்தியாவில், உலகம் என்பது ஒன்று என்ற கொள்கையில் தனது வேர்களைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் மக்களின் பொறுப்புணர்வு, கடமைகள் கூறப்படுகின்றன. சீனாவில் உலகம் என்பது ஒரே குடும்பம் (தியான்ஷியா யிஜியா) என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆர்வம், விருப்பம், மனிதகுலத்தின் பாதை ஆகியவை ஒன்றோடொன்று இணைந்துள்ளது. இதில், நமக்கு ஏற்படும் சவால்கள் பொதுவானவை, அதற்கு தீர்வுகளை கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.

சீனா, கலாசார ரீதியாக மேம்பட்டது என பிரசாரம் செய்யப்படுகிறது. அதன் பாதை, அமைப்புமுறை, கோட்பாடு என்பதற்கு அடிப்படையாக சோசலிசம் இருக்கிறது, ஆனால், ஜனநாயகம் என்று வரும்போது, இக்கொள்கைகள் பொருந்துவதில்லை. அமெரிக்கா, சீனா என்ற இருநாடுகளுக்கு இடையிலான போட்டியிலும் இதைப் பார்க்கலாம்.

சீனா, உள்நாட்டில் கன்ஃபியூசியஸ் இன்ஸ்டிடியூட்களை நிறுவி நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் என்று பார்த்தால், ஆயிரம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கு நாடுகளின் ஊடகங்களுக்கு சவால் விடும் வகையில் சீன ஊடக நிறுவனங்களின் பரந்த செயல்பாடு அமைந்துள்ளது. ஷின்குவா செய்தி நிறுவனத்திற்கு, உலக நாடுகளில் 180 கிளைகள் உள்ளன. சீன மத்திய தொலைக்காட்சி - சிசிடிவி, ஐ.நா சபை அங்கீகரித்த ஐந்து மொழிகளில் 171 நாடுகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. 70 வெளிநாட்டு அலுவலகங்களைக் கொண்டுள்ளது. பிபிசிக்கு அடுத்தபடியாக பெரிய வானொலி நிறுவனம், சீனா ரேடியோ இன்டர்நேஷனல்தான். வெளிநாடுகளில் 32 அலுவலகங்களைத் திறந்து இயங்கி வருகிறது. மொத்தம் 64 மொழிகளில் செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது. சீனத்தின் முக்கிய செய்திதாள்கள், பீப்பிள்ஸ் டெய்லி, சீனா டெய்லி. வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.

இந்தியா, பொருளாதார அடிப்படையில் சீனாவின் முன் நிற்க கூட முடியாத நிலை. இந்திய கலாசார உறவு கவுன்சில், 37 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, இந்திய விழாக்களை நடத்துவதோடு இந்திய மாணவர்களுக்கு உதவுகிறது. வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் வந்து படிக்க கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகிறது.

யோகா, உணவு, நடனம் ஆகியவற்றின் வழியாக இந்தியா தனது மென்மையான அதிகாரத்தை உலகம் முழுக்க செலுத்தி வருகிறது. உலகம் முழுக்க 300 மில்லியன் பேர் யோகா பயிற்சிகளை செய்து வருகிறார்கள். சீனாவில் 2017-2021 காலகட்டத்தில் மட்டும் 42 ஆயிரம் யோகா மையங்கள் செயல்பட்டு வந்ததாக சீனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  

பி ஆர் தீபக்
தி வீக் இந்தியா

#china #peoples daily #china daily #influence #media #xinhua news #confucius institute #tianxia yijia #yoga #culture #bbc radio #china radio international #china central telivision #scholarship

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்